உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்கணும்; மத்திய அரசு அறிவுரை

நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்கணும்; மத்திய அரசு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்பட்ட நிலையிலும், போராட்டம் தொடர்கிறது. நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.சமூக வலைதளங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்ததை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக இந்தக்கால இளைஞர்கள் கருதும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் பலியான நிலையில், தடையை வாபஸ் பெறுவதாக நேபாள அரசு அறிவித்தது.நேபாள அரசின் இந்த குளறுபடியை அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:நேபாளத்தில் நடந்து வரும் சம்பவங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இளைஞர்கள் பலர் உயிர் இழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இதில் தொடர்புடைய அனைவரும் நிதானத்துடன் செயல்பட்டு, பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடரும் போராட்டம்இன்று நேபாளத்தின் முக்கிய நகரங்களில் போராட்டம் தொடர்கிறது. தலைநகர் காத்மாண்டுவில், அதிபர் மாளிகை அருகே போராட்டக்காரர்கள் கும்பலாக கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர், அதிபர் மாளிகை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
செப் 09, 2025 15:50

திருப்பதியில் மொட்டை என்ற அடையாளம் போல்....வட இந்தியர்.. நேபாளி மக்கள் மத்தியில் எப்படி தெரியும்


Venkatesh Lakshminarayanan
செப் 09, 2025 14:49

இந்தியா கவனமாக இருக்க வேண்டும். மியான்மர் பங்களாதேஷ் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா நேபால் என்று சார்க் நாடுகளில் துவக்கப்பட்ட கலவரங்களும் ஆட்சி மாற்றங்களும் ஏதோ ஒரு சக்தியின் பின்பலம்கொண்டு நடக்கிறது. அது இந்தியா வை தாக்காமல் காத்துக்கொள்ள வேண்டும்


Moorthy
செப் 09, 2025 14:34

நேபாளில் அமைதியை கொண்டு வர ஒரு இந்து அரசு உடனடி தேவை கம்யூனிசம் ஒரு தோற்றுப்போன மாடல் என்பது மீண்டும் நிரூபணம்


Moorthy
செப் 09, 2025 14:32

மீண்டும் ஒரு இந்து அரசு நேபாளில் நிறுவ சரியான தருணமிது


Moorthy
செப் 09, 2025 14:29

நேபாள், இலங்கை, வங்கதேசம், பாக்கிஸ்தான் இவையெல்லாம் ஜனநாயகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் ராவண ராணுவ அரசுகள்


Ramesh Sargam
செப் 09, 2025 11:05

நேபாளத்தில் வசிக்கும் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்றி மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வர் சுயநலமாக ஒரு கடிதம் பிரதமர் மோடிக்கு எழுதுவார் பாருங்கள். தமிழக முதல்வருக்கு இந்தியாவை சேர்ந்த மற்ற மாநிலத்தவர்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன என்கிற மனப்பான்மை இதற்கு முன்பும் இருந்திருக்கிறது.


Kannan Chandran
செப் 09, 2025 11:26

தலிவரு கடிதம் எழுதுவாரு, குடும்ப சேனல்ல பப்ளிஷ் பண்ணுவாரு, பின்னர் ஆத்துல தூக்கி போட்டுடுவாரு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை