உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: பூட்டிய வீட்டில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் பூட்டிய வீடு ஒன்றில் இருந்து ரூ.100 கோடி மதிப்பில் தங்க கட்டிகள், நகைகள், வெளிநாட்டு கைக்கடிகாரங்களை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு: ஆமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவினர், தீவிரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து சோதனை நடத்த திட்டமிட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h7jdy9vz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு சென்ற குழுவினர், வீடு பூட்டப்பட்டு இருக்க அங்கு வசித்து வந்த மேக் ஷா என்பவரின் உறவினரிடம் இருந்து சாவியை பெற்று சோதனையை தொடங்கினர். அதிரடியாக நடைபெற்ற இந்த சோதனையில் வீட்டின் உள்ளே 87.9 கிலோ தங்கக் கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள், ரூ.1.37 கோடி ஆகியவை மீட்கப்பட்டன.சிக்கிய பணத்தின் அளவு அதிகம் என்ற காரணத்தால், அதை எண்ணும் இயந்திரத்தை அதிகாரிகள் அங்கேயே கொண்டு சென்று பணத்தை எண்ணினர்.இதுகுறித்து தீவிரவாத தடுப்பு படை டி.எஸ்.பி., சுனில் ஜோஷி கூறியதாவது: உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த வீட்டை மேக் ஷா என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். துபாய் பங்கு சந்தை முதலீட்டாளரான அவரின் தந்தை மகேந்திரா ஷா ஆகிய இருவருக்குமான நிதி பரிவர்த்தனைகள் போலி நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sudha
மார் 19, 2025 13:51

ராபின் ஹூட் என்றொரு கேரக்டர், கருப்பு பணம், ஜென்டில் மேன் போன்ற படங்கள் நிஜத்தில் நடக்க வேண்டும்


Nallavan
மார் 19, 2025 13:32

ஆரிய பவன் குரூப் ஆக இருக்கலாம்


Ganesh
மார் 19, 2025 12:57

இந்த மாதிரி செய்திகள் சந்தோசத்தை தருகிறது.. ஏனென்றால் கள்ள பணத்தை மார்க்கெட்டில் போட்டு சர்க்ககுலேஷன் விட முடியவில்லை... இது அரசுகள் தங்களுடைய உளவுத்துறையை மேன்மை படுத்தி நிறைய சோதனைகளை செய்ய வேண்டும்.. இந்த பணம் எல்லாம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.. இப்படி நிறைய இடங்களில் செய்தால் லஞ்சம் மட்டுப்படும் மற்றும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்...


Sudha
மார் 19, 2025 13:54

எல்லோரும் 1 ரூபாயாவது வருமான வரி கட்டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும், சிறிது சிறிதாக பிடி இறுக வேண்டும்


Sudha
மார் 19, 2025 12:06

சில மாநிலங்களுக்கு...


M. PALANIAPPAN, KERALA
மார் 19, 2025 11:19

திராவிட சுறா மீன்களா? அதற்கும் மேலே


Ganesun Iyer
மார் 19, 2025 10:43

வந்து 10 வருஷம் ஆச்சி, அதுக்கு முன்னாடி குஜராத்தல 10 வருஷம்.. மணி லாண்டரிங் செய்யறவங்களுக்கு பயமே இல்லை... என்ன சட்டமோ? கோடிஸ்வரற்களின் வாராக்கடன் பலமடங்கு உயற்ந்துள்ளது ...


Kanns
மார் 19, 2025 10:04

Modis Benami


Bala
மார் 19, 2025 11:50

நம்ம டாஸ்மாக் ஊழல் புகழ் செந்தில் பாலாஜியின் பினாமியாக இருக்குமோ. திராவிட மாடலா கொக்கா ?


வாய்மையே வெல்லும்
மார் 19, 2025 17:12

இருநூறு ரூபாய்க்கு கூவச்சொன்னா இரண்டாயிரம் கோடியளவுக்கு கூவுனா.. எவன் ஒத்துப்பான்..


Mecca Shivan
மார் 19, 2025 09:41

இந்தியாவிலிருந்து gst மற்றும் வருமான வரி எதுவும் கட்டாமல் மாதா மாதம் சம்பாதிக்கப்படும் பல ஆயிரம் கோடிகள் இப்படித்தான் வெளிநாட்டுக்கு அனுப்பபடுகிறதோ? லஞ்சத்தில் கொழிக்கும் IT மற்றும் GST அலுவலர்கள் ஒருபுறம் மறுபுறம் துறை ரீதியாக சிறு குறு வியாபரம் இல்லாத வணிகரகளிடம் பல ஆயிரங்களில் அபராதம் என்று ராட்சஸத்தனமாக செயல்படும் துறைக்கு ஒரு மந்திரிக்கு கோவம் மட்டுமே வருகிறது ..


RAVINDRAN.G
மார் 19, 2025 09:35

இதுவரைக்கும் பிடிபட்ட நகைகள் சொத்துக்கள் தங்க கட்டிகள் ரொக்கங்கள் எங்கே இருக்கிறது? அதேபோல விமான நிலையம் துறைமுகம் போன்றவகையில் பிடிபடும் தங்கம் எங்கே இருக்கிறது? யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது உண்மை. கடைசிவரை உழைப்பவன் ஏமாற்றப்படுகிறான். ஊரை கொள்ளையடிப்பவன் உல்லாசமாக வாழ்கிறான். கலியுகம் அப்படிதான் இருக்கும்


अप्पावी
மார் 19, 2025 09:31

நம்ம ஆளுங்கதான்.


வாய்மையே வெல்லும்
மார் 19, 2025 10:41

அடப்பாவி உங்க ஆளுங்க தான்.. சந்தேகம் என்ன. குருவியின் தலைவர்களே .... தான் .


புதிய வீடியோ