உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயர்ன் பாக்சில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம்: டில்லியில் பறிமுதல்

அயர்ன் பாக்சில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம்: டில்லியில் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் இரண்டு பேரிடம் 979 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் அயர்ன் பாக்சில் தங்கம் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டில்லிக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பிறகு எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை பிரித்து சோதனை செய்யப்பட்டது. அதில், எலெக்ட்ரிக் அயர்ன் பாக்சில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் மதிப்பு ரூ.46.80 லட்சம் ஆகும்அதேபோல், நேற்று (ஜன.,06) சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ஆண் பயணியின் உடமைகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டன. எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் அவர் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பையில் மறைத்து 379 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கம் கொண்டு வந்தது தெரியவந்தது. ரூ.29 லட்சம் மதிப்புள்ள இது பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஜன 07, 2025 21:28

குருவிகள் காணவில்லை என்று முகநூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார் , நான் கண்டுபுடுச்சிட்டேன்...


Ganapathy
ஜன 07, 2025 17:44

ஸனாதன ஹிந்துக்களும் அடையாளந் தெரியாத மர்ம நபர்களும் கூடிவாழும் மணித்திரு நாடுதான் எங்கள் பாரத திருநாடு.


Constitutional Goons
ஜன 07, 2025 17:11

அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது ஆளும் கட்சியின் பணி மட்டுமல்ல. அணைத்து கட்சிகளும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் .


Ganapathy
ஜன 07, 2025 16:32

பரம்பரையாக இவங்கதான் வெளிநாட்டுலேந்து பொருள்களை கடத்தி வந்து இங்க கடையே போட்டு விற்பது இந்த மர்ம நபர்களை புடிச்சவங்களுக்கு தெரியாதுங்க...ஆமாங்க சொன்னா நம்புங்க..அவங்க பேரைச்சொன்னா வம்புங்க...மைனாரிட்டி ஓட்டு போயிருங்க..


Kumar Kumzi
ஜன 07, 2025 16:04

அப்போ அந்த ஆண் பயணினு மொட்டையா சொன்னா எப்பிடி பயமா தெளிவா மூர்க்கனு சொல்லிடலாமே இதிலென்ன மர்மம் இருக்கு இது அவனுங்க அன்றாடம் செய்யும் தொழில் தானே


Kasimani Baskaran
ஜன 07, 2025 14:21

ஆண் மர்மநபரா அல்லது இல்லையா என்பதையும் தெரிவித்து இருக்கலாம். பாமரர் போன்ற சான்றோர் அதற்க்கு தக்க வகையில் கறுத்து கருத்து அல்ல போட்டு இருப்பார்கள்..