உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்தார் தங்கமகன் நீரஜ் சோப்ரா

டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்தார் தங்கமகன் நீரஜ் சோப்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார். இந்திய இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனால், பிரபலம் அடைந்த நீரஜ் சோப்ரா, 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.இந்நிலையில், சத்தமே இல்லாமல், நீரஜ் சோப்ரா தனது திருமணத்தை முடித்துள்ளார். ஹிமானி மோர் எனும் டென்னிஸ் வீராங்கனையை அவர் கரம் பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மேலும் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.திருமணம் குறித்த எந்த தகவலையும் நீரஜ் சோப்ரா வெளியிடாத நிலையில், தற்போது திருமண போட்டோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். . ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீரஜ் சோப்ராவுக்கு இரு தினங்களுக்கு முன்பு நடந்ததாகவும், அது எங்கே நடைபெற்றது என்று தான் சொல்லமுடியாது என்றும் அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Siva Kavi
ஜன 21, 2025 07:21

திருமண வாழ்த்துக்கள்


Ranjani
ஜன 20, 2025 18:14

congratulations


N Annamalai
ஜன 20, 2025 14:26

வாழ்த்துக்கள்


Ramesh Sargam
ஜன 20, 2025 12:24

வாழ்த்துக்கள்.


M. PALANIAPPAN
ஜன 20, 2025 10:01

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் , இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்


Oru Indiyan
ஜன 20, 2025 08:55

வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமையடைய செய்த தங்க மகனுக்கும் டென்னிஸ் வீராங்கனைக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்


Barakat Ali
ஜன 20, 2025 08:36

வாழ்த்துக்கள் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை