உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது; தேர்தல் முடிவால் பிரதமர் மோடி மகிழ்ச்சி

நல்லாட்சி, சமூக நீதி வென்றுள்ளது; தேர்தல் முடிவால் பிரதமர் மோடி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நல்லாட்சி, வளர்ச்சி, பொது நல உணர்வு மற்றும் சமூக நீதி வென்று உள்ளது என பீஹார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலில், மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: நல்லாட்சி, வளர்ச்சி, பொது நல உணர்வு மற்றும் சமூக நீதி வென்று உள்ளது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்ததற்காக பீஹாரில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான தீர்ப்பு, மக்களுக்கு சேவை செய்யவும், பீஹாருக்காக உறுதியுடன் பணியாற்றவும் எங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.அயராது உழைத்த ஒவ்வொரு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பொதுமக்களை அணுகி, எங்கள் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு பொய்யையும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களில், பீஹாரை மேம்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாநிலத்தின் கலாசாரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கவும் நாங்கள் அயராது உழைப்போம். இளைஞர்கள் மற்றும் பெண்கள் வளமான வாழ்க்கைக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thravisham
நவ 14, 2025 21:54

இதென்ன சமூக நீதி?. சமூக நீதி காப்பி ரைட் திருட்டு த்ரவிஷ கட்சிகளுக்கே உள்ளது.


சிட்டுக்குருவி
நவ 14, 2025 19:01

மக்களுக்கு அரசியல் வியாதிகளால் அடிக்கப்படும் கூட்டுக்கொள்ளைகளால் எவ்வாரு அவர்களின் வாழவவதாரங்கள் சூறையாடப்படுகின்றன ,அவர்களுக்கு ஏற்படும் அடிப்படைவசதிகளின் சீர்கேடு பற்றிய விவரங்கள் தெளிவாகிவிட்டது என்பதே இந்த தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு .உழவாதிகளின் அடையாளங்களை நன்கே அறிந்துள்ளார்கள் என்பது தெளிவு .இன்னொன்று சேரும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது என்பதும் தெளிவு .இதை அறிந்து ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஊழல்களால் சீரழிந்த தமிழகத்தின் அடிப்படைவசதிகளை மீட்டெடுத்து தமிழகத்தை மேம்படுத்திட ,மக்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்திட ,மக்களுக்கு எல்லாவலங்களையும் மேம்படுத்திட ,சுத்தம்சுகாதாரமான சூழ்நிலைகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .தனியாளாக ஆவர்த்தனம் செய்ய இயலாது என்பதும் இதில் தெளிவு .


Priyan Vadanad
நவ 14, 2025 18:48

சும்மா பெருமை கொள்ளாதீர்கள். எங்கள் தலைவர் ராகுல் அவர்களின் அதிர்ஷ்ட ராசியால்தான் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பதை மறக்கவேண்டாம். ராகுல் அதிர்ஷ்டத்தால் தமிழ்நாட்டிலும் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். நம்பிக்கையுடன் களமிறங்குங்கள்.


GMM
நவ 14, 2025 18:23

பிஜேபி கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணம் எதிர் கட்சி தலைவர், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ராகுல் காந்தி MP அவர்கள். அவருக்கு முதல் Sweet. பிஜேபி கொடுத்து இருக்க வேண்டும். தகுதியான குடிமக்கள் ஓட்டை திருட்டு ஓட்டு என்றார். மக்கள் தங்கள் வாக்கு புரட்சியை செயலில் காட்டி வருகிறார்கள். வாக்கு புரட்சி நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம், மேற்கு வங்கம். தேர்தல் ஆணையம் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்றம்?


Barakat Ali
நவ 14, 2025 18:08

பீகாரில் தற்போதைய 25 அமைச்சர்களில் 24 அமைச்சர்கள் முன்னிலையில் இருக்கிறார்களாமே ???? தமிழ் கூறும் நல்லுலகில் இவ்வாறு நடக்குமா ????


சமீபத்திய செய்தி