உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுபிஐ அப்டேட்: பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!

யுபிஐ அப்டேட்: பணம் அனுப்புவதை எளிதாக்க புது வசதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பின் நம்பருக்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை வங்கி மற்றும் நிதித்துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது.தற்போதைய காலத்தில், யுபிஐ பண பரிவர்த்தனைகள் அதிகம் நடந்து வருகிறது. மாதம் தோறும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புது புது பிரத்யேக வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. தற்போது யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பின் நம்பருக்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை வங்கி மற்றும் நிதித்துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் விரல் ரேகை மற்றும் முக அடையாளம் (face) மூலம் பயனர்கள் யுபிஐ பேமென்ட் மேற்கொள்ளலாம். தற்போது உள்ள யுபிஐ பேமென்ட் முறையில் பின் பதிவிட்டு பணம் அனுப்பும் நடைமுறை உள்ளது. பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் நடைமுறைக்கு வருவதன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் விரைந்து மேற்கொள்ள வசதியாக இருக்கும் எனவும், மிகுந்த வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ