உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

புதுடில்லி; லோக்சபாவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி 16 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.பரபரப்பான அரசியல் சூழலில் பார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 21 அமர்வுகள் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4unarcuv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரி, அவர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து அவர்கள் இடையூறு செய்து கொண்டே இருந்ததால் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் அவையில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது. இந்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதே இதற்கு காரணம். அவையில் விவாதம் நடத்தப்படும் போது பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். எனவே அடுத்த வாரம் விவாதம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
ஜூலை 21, 2025 20:29

ஆபரேஷன் சிந்தூரால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பக்கி களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பப்பு வகையறா அதிகார கோரிக்கை வைக்கும்.... வேறென்ன? இஸ்லாமிய அடிமைத்தனம் காந்தி நேருவின் பரம்பரை பாவமூட்டை & சொத்து காங்கிரஸ் கம்மி திராவிஷ கும்பல்களுக்கு...இவர்களை வெளுத்து வாங்க இன்னும் சில முறைகளாவது குமார கம்பண்ணர் சத்ரபதி சிவாஜி மஹாராணா பிரதாப சிம்ஹன் வரவேண்டும்..


GMM
ஜூலை 21, 2025 19:17

பாராளுமன்றம் புதிய மசோதா தாக்கல், பழைய மசோதா புதுப்பித்தல், நீதிமன்ற, தேர்தல் ஆணைய சீர்திருத்தம்.. போன்ற பணிகள் செய்யவா? மக்கள் செல்வாக்கு இழந்த புள்ளி கூட்டணி கோரிக்கை ஏற்று, இஷ்டம் போல் விவாதம் செய்யவா?