உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 20 பேர் பரிதாப பலி

தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 20 பேர் பரிதாப பலி

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசு பஸ் மீது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த கிராவல் மண், பஸ் பயணிகள் மீது கொட்டியது. இதில் பயணிகள் 20 பேர் தப்பிக்க வழியின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேரில் சகோதரிகளான தனுஷா, சாய் பிரியா, நந்தினி ஆகியோர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nsezwu3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தால் செவெல்லா - விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: ரங்கா ரெட்டி மாவட்டத்தில் செவெல்லா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கானாபூர் கேட் அருகே அரசு மற்றும் லாரி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் இரங்கல்

இந்த விபத்து குறித்து தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரங்கா ரெட்டி மாவட்டத்தின் செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்ஜாகுடா அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் 19 பேர் உயிரிழந்த துயர விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும், காயமடைந்த பயணிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுத்துகிறேன். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

பிரதமர் இரங்கல்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தெலுங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் இழப்பு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kulandai kannan
நவ 03, 2025 11:43

இன்றைய கோட்டா, யாருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லை.


சிந்தனை
நவ 03, 2025 11:06

மக்கள் வரி ஊழியர்கள் சம்பளம் வாங்க நன்றாக தெரிந்தவர்கள் ஆனால் வேலையை நன்றாக செய்வதற்கு இல்லை


முதல் தமிழன்
நவ 03, 2025 10:13

சீக்கிரம் சிபிஐ விசாரணை கேளுங்க


Ramesh Sargam
நவ 03, 2025 09:37

கர்னூல் - பெங்களூரு பேருந்து எரிந்து பயணியர் இறந்த அந்த சம்பவம் நம் மனதில் இன்னும் மறையவே இல்லை. அதற்குள் மற்றுமொரு சாலை விபத்து. என்ன கொடுமையடா இது? இறந்தவர்கள் அனைவரும் தப்பிக்க வழியின்றி இறந்திருக்கிறார்கள். நான் அந்த சம்பவத்தின்போதே கூறினேன், இன்றைய பேருந்துகளில் ஒன்று அல்லது இரண்டு கதவுகள் மட்டுமே உள்ளன. அதுவும் இரவு பேருந்துகளில் ஒரே ஒரு கதவு. ஏதாவது விபத்து என்றால் அணைத்து பயணியரும் முண்டியடித்துக்கொண்டு முன்பக்கம் உள்ள கதவை நோக்கித்தான் தப்பிக்க வேண்டும் என்கிற நிலை. நான் அன்று கூறியதுபோல, ஒரு பேருந்தில் குறைந்த பட்சம் இரு பக்கங்களிலும் தலா இரு கதவுகள் பொறுத்தப்பட்டால் விபத்து ஏற்பட்டவுடன் பயணியர் சுலபமாக தப்பிப்பதற்கு வசதியாக இருக்கும். நம் பேச்சை யார் கேற்கிறார்கள். இந்த விபத்தில் பலியான அனைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அதிகாரிகள் இப்பவாவது விழித்துக்கொண்டு போதுமான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதாவது அதிகமான கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை