உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் கட்

பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியருக்கு சம்பளத்தில் கட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: பெற்றோரை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைக்க தெலுங்கானா அரசு சட்டம் கொண்டு வர உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு பணிக்கு, 'குருப் - 2' மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாதில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று பணி நியமன ஆணையை வழங்கினார். புதிய அதிகாரிகளிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: பிரச்னைகளுடன் வரும் பொதுமக்களிடம் அரசு ஊழியர்களான நீங்கள் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால், அவர்களது சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட தொகையை, ஊழியர்களின் பெற்றோர் வங்கி கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சம்பளம் பெறுவது போல் உங்கள் பெற்றோரும் மாத சம்பளம் பெறுவது, இதன் மூலம் உறுதி செய்யப்படும். இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மசோதாவை உருவாக்குவதற்கான குழுவை அமைக்க, தலைமை செயலர் ராமகிருஷ்ண ராவை கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K s renganathan
அக் 22, 2025 06:13

எஸ் சார் நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு கவனிக்கறது இல்லையா


Subash BV
அக் 20, 2025 13:54

Already a rule is there . Tighten it. DONT CREATE PROBLEMS IN THE FAMILY. THINK SERIOUSLY.


Ram
அக் 19, 2025 13:27

நீங்கள் கொடுக்கும் சம்பளம் அவர் செய்யும் வேலைக்கு மட்டும்தான் … அரசுக்கு அவ்வளவு கரிசனம் என்றல் நாட்டில் உள்ள எல்ல முதியோருக்கு இலவச பென்ஷன் கொடுக்கவேண்டியதுதானே


ஆரூர் ரங்
அக் 19, 2025 09:33

வாரிசுகளிடம் தேவையில்லாமல் அன்றாடம் வீம்புக்கு சண்டையிடும் தாய் தந்தையரை என்ன செய்யலாம்? 2 மருமகள்கள் இருக்கும் வீட்டில் மாமனார் தண்ணியடித்து தகராறு செய்த செய்தியும் உண்டு. வரதட்சிணை பற்றி கடைசி காலம் வரை தகராறு செய்யும் மகனைப் பெற்றவர்களை எப்படி நடத்துவர்? பெரும்பாலும் இருபக்கமும் தவறு உள்ளது.


Barakat Ali
அக் 19, 2025 09:10

சமூக அவலம்தான் ...... ஆனால் அது கோர்ட் மூலம் தீர்க்கப்படவேண்டிய பிரச்னை அல்லவா ????


Kasimani Baskaran
அக் 19, 2025 08:54

கலாச்சாரத்தை போற்றி பாதுகாத்து இருந்தால் இதற்க்கெல்லாம் தேவை இருந்திருக்காது.


Ramesh Sargam
அக் 19, 2025 08:20

நல்லது. அதேபோன்று வாக்களித்த மக்களை புறக்கணிக்கும் அமைச்சர்கள், எம் எல் ஏக்களின் சம்பளத்தில் குறைந்தது அரை பங்காவது கட் செய்யவேண்டும். செய்வீர்களா?


dinesh p
அக் 19, 2025 08:09

well done sir!


Rajarajan
அக் 19, 2025 07:34

நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர். வாழ்த்துக்கள்.


Maha
அக் 19, 2025 07:25

Implement in Tamil Nadu also.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை