உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிமில் வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

சிக்கிமில் வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

காங்டாக்: சிக்கிமில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் வியாழக்கிழமைகளில், மாநிலத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய உடை அணிய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இம்மாநில உள்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: சிக்கிமின் வளமான கலாசாரத்தை பாதுகாக்க, முதல்வர் பிரேம் சிங் தமாங் அயராது உழைத்து வருகிறார். அவரது முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும், வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சிக்கிமின் வளமான கலாசாரத்தை அடுத்த தலைமுறையினரிடையே எடுத்துச் செல்வதும், அரசு ஊழியர்களிடையே பாரம்பரிய மதிப்புகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்கிமின் பாரம்பரிய உடைகள், அங்குள்ள பல்வேறு இன சமூகங்களான லெப்சாஸ், பூட்டியா, கூர்கா ஆகியவற்றின் தனித்துவமான பாணிகள் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
நவ 04, 2025 14:17

அரசு ஊழியர்கள் பை இல்லாத வேட்டி சட்டைகளை மட்டுமே அணியலாம் என்று விதி கொண்டுவரலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 04, 2025 16:38

ஏனுங்க கை இல்லாதவங்களுக்கு மட்டுமே அரசு ஊழியர் பதவி தரணும்னு சொல்லிடுவீங்க போல இருக்கே


Iyer
நவ 04, 2025 07:57

வரவேற்கத்தக்க நடவடிக்கை. வாரம் ஒரு நாள் மட்டும் ஏன்? எப்போதுமே பாரம்பரிய உடை அணியவேண்டும். தமிழ் தமிழ் என்று பொய்வேஷம் போடும் பலர் இன்று வேட்டி கட்டுவதை கௌரவக்குறைவாக நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் PURE COTTON வெள்ளை வேட்டியையும் வெள்ளை சட்டையையும் கட்டாயம் ஆக்கவேண்டும்.


Krishna
நவ 04, 2025 07:52

Ensure this for All for 50% days throughout year in All States


chennai sivakumar
நவ 04, 2025 07:27

சூப்பர். எல்லா மாநிலங்களும் இதை பின் பற்ற வேண்டும். நடக்குமா??


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 04, 2025 07:11

வரவேற்கப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய முன்னெடுப்பு. தமிழ்நாட்டிலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தமிழர்களின் பாரம்பரிய வேஷ்டி அணிவார்களா என்பதை அந்த பகுத்தறிவுக்கடவுள் பெரியாரால்கூட சொல்லமுடியாது


Palanisamy T
நவ 04, 2025 02:30

இதுவொரு நல்லமுயற்சி இந்திய மண்ணின் பாரம்பரியத்தை கலாச்சாரத்தை என்றும் போற்றுவது வரவேற்கத்தக்கவொன்று. மக்களும் இதை வரவேற்கவேண்டும். மற்ற மாநிலங்களும் இதை பின் பற்றலாம். ஆனால் இதை கட்டாயப் படுத்துவது ஏற்கக் கூடியவொன்றா?


Kumar Kumzi
நவ 04, 2025 01:29

சொரியானை பின்பற்றும் திராவிஷத்துக்கு பிக்கினி மாடல் தானே புடிக்கும் ஹீஹீஹீ


Ramesh Sargam
நவ 04, 2025 00:49

சரியான, வரவேற்கப்படவேண்டிய உத்தரவு. இதைப்போன்று எல்லா மாநிலங்களிலும் அந்த அந்த மாநிலத்து பாரம்பரிய உடையை ஆண், பெண் இரு பாலாரும் கட்டாயம் அணியவேண்டும் என்று அந்த அந்த மாநில முதல்வர்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். முடிந்த அளவு, குறிப்பாக பெண்கள், அரைகுறை ஆடை அணிவதை தவிர்க்கவேண்டும்.


சமீபத்திய செய்தி