உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு; கேரள கல்வித்துறை பரிந்துரை

அரசு வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு; கேரள கல்வித்துறை பரிந்துரை

திருவனந்தபுரம்; கேரளாவில், 3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில உயர்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.இதுகுறித்து அம்மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து நிருபர்களிடம் கூறியதாவது; கல்லூரி சேர்க்கையில் 3ம் பாலினத்தவர்களுக்கு ஏற்கனவே ஒரு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்படிப்பு பிரிவுக்கும் இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட உள்ளது.மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில், திறனுடன் கூடிய பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பிந்து கூறினார்.கேரளாவில், இந்த ஆண்டு 3ம் பாலினத்தவர் கலை விழா வர்ணப்பகிட்டு என்ற பெயரில் கோழிக்கோட்டில் வியாழன்று தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், 3ம் பாலினத்தவர்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு கொள்கைகள் பற்றி நாடு முழுவதும் இருந்து வரும் அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.பல்வேறு துறைகளில் சாதித்த 3ம் பாலினத்தவர்களுக்கு விருதுகள் வழங்கியும் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ