அரசு பணத்தை பரிசு பொருட்களுக்காக செலவிடக் கூடாது; நிதியமைச்சகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளின் போது, பொது நிதியை பரிசு பொருட்களுக்காக செலவிடுவதற்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத்துறை வெளியிட்ட சுற்றறிக்கை; நிதிக் கட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியமில்லா செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் பிற திருவிழாக்களுக்கான பரிசு உள்ளிட்ட பொருட்களுக்கு அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் பிற துறைகளுக்கு எந்தச் செலவும் ஏற்படுத்தப்படக்கூடாது.செலவினத்துறை செயலாளர் ஒப்புதல் அளித்த இந்தக் கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.