உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன தொழில்நுட்பங்களையும் அரசு அதிகாரிகள் கற்க வேண்டும்: பிரதமர் மோடி

நவீன தொழில்நுட்பங்களையும் அரசு அதிகாரிகள் கற்க வேண்டும்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு அதிகாரிகளின் பணித் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும், 'கர்மயோகி' என்ற திட்டம், 2020 செப்.,ல் துவக்கப்பட்டது. இதன்படி பணியிடை பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கர்மயோகி தேசிய கற்றல் வார நிகழ்ச்சியை டில்லியில் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:கர்மயோகி திட்டத்தின் வாயிலாக அரசு அதிகாரிகளுக்கு தேவையான பணியிடை பயற்சி வழங்கும் முயற்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில், 1,400க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில், 1.5 கோடி பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்பதை உலக நாடுகள் ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. நம் நாட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு ஏ.ஐ., எனப்படும் 'ஆஸ்பிரேஷன் இந்தியா' என்ற முன்னேற விரும்பும் இந்தியா என்ற சவால் நம்முன் உள்ளது. இந்த இரண்டும் இணையும்போது, 2047ல் வளர்ந்த நாடு என்ற இலக்கை நாம் சுலபமாக எட்ட முடியும்.இதற்கு, அரசு அதிகாரிகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதன் வாயிலாக தங்களுடைய பணித் திறன்களை மேம்படுத்தி கொள்வதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் உதவும்.ஐ.ஏ.எஸ்., போன்ற குடிமைப்பணிகளுக்கு தனியாக பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் புதுமையை புகுத்த வேண்டும். இதற்கு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இளைஞர்கள், ஆராய்ச்சி அமைப்புகள் தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பாமரன்
அக் 20, 2024 09:10

அதாவது நம்ம ஜி சொல்ல வர்றது என்னன்னா...


Kasimani Baskaran
அக் 20, 2024 07:40

உடன்பிறப்புக்களும் நடுவில் நிற்பவர்களுக்கு கதறுவது நன்றாக கேட்கிறது.


Rajarajan
அக் 20, 2024 06:21

ஐயோ பாவம், இன்னும் கூட பிரதமருக்கு, அரசு ஊழியரின் நிலைமை தெரியல போலிருக்கு. அவங்க எல்லாம் ராஜா வீட்டு கன்றுக்குட்டிகள். சம்பளம் மற்றும் சலுகைளை மட்டும் குறைவெக்கவே கூடாது. அதுக்கும் போராடுவாங்க. கல்வி / காலத்திற்கேற்ற திறமை / புதுமை புகுத்தினா, அதையும் எதிர்த்து போராடுவாங்க. கேட்டா, அரசு ஊழியர்னு பெருசா பீத்திப்பாங்க. நஷ்டத்தில் ஓடும் / தேவையற்ற அரசு நிறுவனங்களை இழுத்து மூடுங்க. பாதிக்கு மேல தேவையற்ற பிரிவை தனியார்மயமாக்குங்க. இன்னுமா அவங்களுக்கு உபதேசம் செய்யறீங்க. வேலை நிரந்தரம் இருந்தா, யாராச்சும் வேலை செய்வார்களா ?


Mani . V
அக் 20, 2024 05:26

எதற்கு? ஊழலை சிறப்பாகச் செய்யவா?


அப்பாவி
அக் 20, 2024 02:21

அப்ப இன்னும் ஒண்ணுமே கத்துக்காம பேனா, பென்சிலை வெச்சுக்கிட்டு ஓட்டிக்கிட்டிருக்காங்களா?


hari
அக் 20, 2024 09:30

அப்பாவி.....டாஸ்மாக் இனிமே ரெண்டு கவுண்டர் இருக்கே.... உனக்கு ஜாலி தான்


முக்கிய வீடியோ