உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ விபத்து தற்செயலானது: அரசு அறிக்கை

தீ விபத்து தற்செயலானது: அரசு அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லக் ஷ்மி பாய் மருத்துவக் கல்லுாரியில், கடந்த 15ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து மூன்று கட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். ஜான்சி கமிஷனர் விபுல் துபே தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை மாநில அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதில், 'மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு நீர் தெளிப்பான்கள் அமைக்கப்படாததால், தீயை அணைக்க முடியவில்லை. 'இந்த தீ விபத்து தற்செயலானது. இதில் குற்றவியல் சதி இல்லை. இதனால் இதுவரை எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்படவில்லை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
நவ 18, 2024 12:31

இது போன்ற தவறுகளுக்கு எல்லாம் புல்டோசர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையோ?


Yaro Oruvan
டிச 13, 2024 07:03

கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்..


MADHAVAN
நவ 18, 2024 12:02

அந்த ஆளுங்களை எல்லாம் ஒரு கை பாக்கபோய்ட்டாரா ? அமித்ஷா - அரசியல் ...


Premanathan S
நவ 18, 2024 10:04

எல்லா விபத்துகளும் தற்செயலே அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுப்பது அனாவசியமா?


ஆரூர் ரங்
நவ 18, 2024 10:50

டாக்டருக்கு கத்திக்குத்தும் தற்செயல்தானே?


Velan Iyengaar
நவ 18, 2024 08:26

ராமராஜ்யத்தில் நடப்பது எல்லாமே தற்செயல் தான் .....அந்த அரசே தற்செயல் நிகழ்வு தான் .....


அப்பாவி
நவ 18, 2024 01:02

ரயில் விபத்தும் தற்செயலே. ஆஸ்பத்திரி விபத்தும் தற்செயலே. உயர்மட்டக்குழு ஓட்டலில் ரூம் போட்டு ஆராய்ஞ்சு தீர்ப்பு சொல்லிடிச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை