உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னர் சக்சேனா உத்தரவு

25 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் கவர்னர் சக்சேனா உத்தரவு

புதுடில்லி:டில்லி மாநகரப் போலீசில், அதிரடி மாற்றம் செய்து, துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.டில்லியில், 25 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம்:சட்டம் - ஒழுங்கு மண்டலம் -1ல், சிறப்பு கமிஷனராக இருக்கும் தேபேந்திர பதக், பாதுகாப்பு பிரிவுக்கும், குற்றப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரவீந்திர சிங் யாதவ், சட்டம் - ஒழுங்கு மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல, சிறப்பு கமிஷனர்கள் ஹெச்.ஜி.எஸ்.தலிவால், போக்குவரத்துப் பிரிவு மண்டலம் - 2க்கும், எஸ்.எஸ்.யாதவ் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், மது திவாரி, சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலம் -2க்கும் சாகர் ப்ரீத் ஹூடா, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, புலனாய்வு நிர்வாகம், மீடியா செல் பிரிவுக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.சிறப்பு கமிஷனர்கள் ஷாலினி சிங், குற்றப்பிரிவுக்கும், ஆர்.பி. உபாத்யாய் சிறப்புப் பிரிவு கமிஷனராகவும், வீரேந்தர் சிங் உரிமம் வழங்கும் பிரிவுக்கும், கே.ஜெகதீசன், போக்குவரத்துப் பிரிவு மண்டலம்-1க்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சிறப்பு கமிஷனர், சாயா ஷர்மா பயிற்சிப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் வடகிழக்கு பிராந்திய சிறப்புப் பிரிவு ஆகியவையும் கூடுதலகாக வழங்கப்பட்டுள்ளது.

துணை கமிஷனர்கள்

துணை கமிஷனர்கள் உஷா ரங்னானி விமான நிலையத்துக்கும், இங்கிட் பிரதாப் சிங் ஊழல் தடுப்புப் பிரிவுக்கும், பிரணவ் தயாள் சிறப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவு கூடுதல் பொறுப்பாக தயாளிடம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, சஞ்சய் குமார் சைன் குற்றப்பிரிவுக்கும், சி.மனோஜ் சிறப்புப் பிரிவுக்கும், குகுலோத் அம்ருதா பொருளாதார குற்றப் பிரிவுக்கும், தியோதோஷ் குமார் சுரேந்திரா தலைமை அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். எம்.ஹர்ஷ வர்தன் மத்திய மாவட்டத்துக்கும், தேவேஷ் குமார் மல்ஹா புதுடில்லி மாவட்டத்துக்கும், ரோஹித் மீனா தென்மேற்கு மாவட்டத்துக்கும், ராகேஷ் பவேரியா குற்றப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அபூர்வ குப்தா கிழக்கு மாவட்டத்துக்கும், சுரேந்திர சவுத்ரி ஷாதாரா மாவட்டத்துக்கும், அங்கித் குமார் சிங் துவாரகா மாவட்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 'டானிப்ஸ்' எனப்படும் டில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ போலீஸ் துணை கமிஷனர்கள் கமல்பால் சிங் ரயில்வே பிரிவுக்கும், படேல் ஆலாப் மன்சுக் பாதுகாப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை