உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னரால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை: டில்லியில் அப்பாவு புகார்

கவர்னரால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை: டில்லியில் அப்பாவு புகார்

புதுடில்லி: '' சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் நிறுத்திவைப்பதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது,'' என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.டில்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை காரணம் கூறாமல் கவர்னர் நிறுத்தி வைக்கிறார். லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேறும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார். சட்டசபையில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகள் கவர்னர் அலுவலகத்தில் முடங்கி கிடப்பதால், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயல்படுத்த முடியவில்லை. சட்டசபையை அவமதிப்பது எம்.எல்.ஏ.,க்களை அவமதிப்பது போல் ஆகும். சமீபகால நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அப்பாவு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

GMM
செப் 24, 2024 00:01

உங்கள் மசோதா மக்கள் விருப்ப அடிப்படையில் இல்லை. உதாரணம். - நீதிமன்றம் வேண்டாம் என்ற மசோதாவிற்கு எப்படி ஒப்புதல் கொடுக்க முடியும். எல்லை மீறும் மசோதா என்றால் ஆட்சி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
செப் 23, 2024 22:46

Theres this ID sathyana____ something, behaves instantly, tracking on personal assaults over me is disgusting. On several news pastures, thirds ID is purring towards me, like a dog in a deep ditch. Pitiful.


Ramesh Sargam
செப் 23, 2024 20:48

இவர்களுக்கு சாதகமாக மசோதாக்கள் தயாரித்து, அதை மக்களின் விருப்பம் என்று கூறி புருடா விடுகிறார் இந்த அப்பாவு. மக்களின் விருப்பம் ஒன்றேஒன்றுதான் - திமுக ஆட்சி ஒழியவேண்டும், திமுக ஒழியவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2024 20:13

உங்களால ஜார்ஜு பொன்னையாக்கு தான் ஊழியம் செய்யமுடியும் , தமிழக மக்களுக்கு அல்லவே ?


Parthasarathy Badrinarayanan
செப் 23, 2024 20:11

ஆள்பவர்களே ஓன்றும் கிழிக்கவில்லை


Subramanian N
செப் 23, 2024 19:41

First dismiss the speaker Appavu, he is misguiding the entire TN by telling great lies like implementation of Prohibition by Centre. Who brought and implemented TASMAC, ids it by the Centre or the Dravidia DMK.


sridhar
செப் 23, 2024 19:22

உன்னால் கூட தான் நடுநிலையாக நேர்மையா நடக்க முடியல , ஹிந்து விரோதமா பேசற .


N Sasikumar Yadhav
செப் 23, 2024 19:01

மக்களின் விருப்பம் திராவிட மாடல் அரசை அகற்றுவது மட்டுமே இதை கவர்னர் செய்யாததைத்தான் சபாநாயகர் அப்பாவூ சொல்கிறார்


Dharmavaan
செப் 23, 2024 18:53

திமுக பிரிவினைவாத கூட்டம் சுயாட்சி என்பதே பிரிவினைவாதம் .நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுமானால் மசோதாவை நிறுத்துவது சரியே


சாண்டில்யன்
செப் 23, 2024 18:50

பிறகு ஏன் நாங்கள் ஹிந்து மெஜாரிட்டி மைனாரிட்டிகளை விரட்டுவோம் என்றல்லாம் பீலா விட்டதேனாம்? இப்போ அடங்கி போனதேன்


சமீபத்திய செய்தி