உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.பி.எஸ்., சிக்னலில் இடையூறு; ஜம்மு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது!

ஜி.பி.எஸ்., சிக்னலில் இடையூறு; ஜம்மு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.பி.எஸ்., சிக்னல் இடையூறு காரணமாக, ஜம்மு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட பின் மீண்டும் டில்லிக்கு திருப்பிவிடப்பட்டது.இன்று டில்லியிலிருந்து ஜம்மு செல்ல திட்டமிடப்பட்டிருந்த ஐ.எக்ஸ்2564, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் டில்லிக்கு திரும்பியது. இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:இன்று டில்லி-ஜம்மு செல்லும் ஐ.எக்ஸ்2564, விமானம் புறப்பட்டு செல்லும் போது ஜி.பி.எஸ்., குறுக்கீடு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்தது. விமானத்தின் பைலட்டுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கொண்டு பயணிக்காமல் மீண்டும் டில்லிக்கு திரும்பி விட்டனர்.அதை தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பிறகு பயணிகள், ஜம்மு செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. கால தாமத பயணத்தால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை.இவ்வாறு செய்தி தொடர்பாளர் கூறினார்.பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் பயணிக்கும்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஜி.பி.எஸ்., குறுக்கீடு தொடர்பாக, உரிய துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Indian
ஜூலை 19, 2025 14:49

மொத்த ஏர் இந்தியா விமானங்களும் பழுதா ?? உயிருக்கு உத்தரவாதம் இல்லை ??


Anantharaman Srinivasan
ஜூன் 24, 2025 00:20

தினமும் வரும் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் செய்திகளுடன் விமான சேவை பாதிப்பும் சேர்ந்து விட்டது.


அப்பாவி
ஜூன் 23, 2025 22:06

எர் இந்தியா விமானம் சரியா கெளம்பினாதான் நியுஸ்


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 21:38

தீவிரவாத தாக்குதல் வேறு விதத்தில் வருகிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 23, 2025 21:27

இந்தியாவில் உள்ள அணைத்து ஏர் இந்தியா விமானங்களும் முழுமையாக பரிசோதனை செய்யப்படவேண்டும். ஒரு சிறு பிரச்சினை இருந்தால் கூட பறக்க அனுமதி மறுக்கப்படவேண்டும். பயணியர் மற்றும் விமான சிப்பந்திகள் உயிருடன் விளையாடுவதை ஏர் இந்தியா விமான நிறுவனம் உடனே நிறுத்தவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை