உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரஹலட்சுமி பணத்துக்காக மனைவியை கொன்ற கணவர்

கிரஹலட்சுமி பணத்துக்காக மனைவியை கொன்ற கணவர்

தாவணகெரே: 'கிரஹலட்சுமி' திட்டத்தின் பணத்துக்காக, மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடுகின்றனர்.தாவணகெரே, ஜகளூரின் உஜ்ஜப்பர ஒடரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் அன்னப்பா, 39. இவரது மனைவி சத்யம்மா, 34. இருவரும் காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.குடிப்பழக்கத்துக்கு அடிமையான அன்னப்பா, சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடிக்க பணம் கேட்டு, மனைவிக்கு தொந்தரவு கொடுத்தார். இதனால் வெறுப்படைந்த சத்யம்மா, பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இவருக்கு மாதந்தோறும் கிரஹலட்சுமி பணம் வருகிறது. பணத்தை எடுப்பதற்காக, நேற்று முன் தினம் மதியம், ஒடரஹள்ளி கிராமத்தின் வங்கிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அன்னப்பா, மனைவியிடம் பேசி, மனதை கரைத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பணத்தை கேட்டுத் தாக்கினார். பணத்தைத் தர மறுத்ததால், கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.தகவல் அறிந்து அங்கு வந்த பிளிகோடு போலீசார், சத்யம்மா உடலை மீட்டனர். அன்னப்பாவை போலீசார் தேடுகின்றனர்.சித்தராமையா அரசு செயல்படுத்திய, கிரஹலட்சுமி திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். ஒரு பெண், தன் மகனுக்கு பைக் வாங்கினார். மற்றொருவர் கிராமத்து மாணவர்களுக்காக லைப்ரரி திறந்தார். இன்னொருவர் இந்த பணத்தை சேமித்து, ஊராருக்கு இனிப்புடன் விருந்து போட்டார்.வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இந்த விஷயத்தை சமூக வலைதளத்திலும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் கிரஹலட்சுமி பணத்துக்காக, முதன் முறையாக ஒரு பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை