உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடல் ஆரோக்கியத்துக்கு அருகம் புல் ஜூஸ்

உடல் ஆரோக்கியத்துக்கு அருகம் புல் ஜூஸ்

பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள, உடற்பயிற்சி செய்கின்றனர். உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். பழங்கள், காய்கறிகளின் ஜூஸ் அருந்துகின்றனர். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதிகம் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்; நோய், உங்களை விட்டு தலைதெறிக்க ஓடும். அதுதான் அருகம்புல் ஜூஸ்.இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை தாராளமாக அள்ளிக் கொடுத்துள்ளது. அவற்றின் அருமை பலருக்கும் தெரிவது இல்லை. அவற்றில் ஒன்று தான் அருகம்புல்.சாதாரண புல் தானே என, அலட்சியமாக நினைக்காதீர்கள். அருகம்புல் ஜூசில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை அருந்துவதால் உடலில் நோய்கள் அண்டாது. புற்றுநோயின் தீவிரம் குறையும். ரத்தத்தை சுத்தமாக்கும்.அருகம் புல்லில் வைட்டமின் ஏ, கே, சி மற்றும் இ ஆகியவை ஏராளமாக உள்ளன. ரத்த அழுத்தம், ரத்த சோகை உட்பட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும். அபாயமான பாக்டீரியாக்களை அழிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் அருகம்புல் ஜூசை எப்படி தயாரிப்பது என தெரிந்து கொள்ளலாமா?செய்முறை:பசுமையான அருகம் புல்லை, ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன்பின் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை வடிகட்டி அருந்துங்கள். ஆரோக்கியத்தை பெறுங்கள். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி