உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: தி.மு.க., மீது சாடிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

தமிழகத்திற்கு ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: தி.மு.க., மீது சாடிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கு ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்? என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னையில் நடந்த பட்ஜெட் குறித்த சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தில், ஜிதேந்திர சிங் பேசியதாவது: மத்திய அரசு வழங்கி உள்ள திட்டங்களை பயன்படுத்தி கொள்ளாமல் தமிழக அரசு பொறுப்பற்றதாக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கானது இந்தாண்டு பட்ஜெட்.இந்த பட்ஜெட் எதிர்கால முன்னேற்றத்திற்கானது. முத்ரா கடன் வரம்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இது சிறு, குறு தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.

போராட்டம் எதற்கு?

பிரதமர் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை, நிதிகளை கொடுக்கிறார். பிறகு எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள்?. பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்கு வளர்ச்சி அடையும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கு ரயில்வேக்கு அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்?

தனி இடம்

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்? பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். பிரதமர் தமிழ் மக்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் நேசிக்கிறார். அவருக்கு தமிழகம் என்றால் மிகவும் பிடிக்கும், அவர் இதயத்தில் தமிழகத்துக்கு தனி இடம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

xyzabc
ஜூலை 28, 2024 13:25

எவ்வளவு கொடுத்தாலும் போதாது அதுவே திராவிடம்


Ravichandran S
ஜூலை 28, 2024 07:46

மெட்ரோ ரயில்வேயில் இலவசமாக நிறுத்த இடம் தரலாமே. மேலும் குறைந்தபட்சடிக்கப் சாதாரணையில் போல ஐந்து ரூபாய்க்கு கொடுத்தால் அனைவரும் பயன்பெறலாம் அரசு செய்யுமா


K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 21:25

அமைச்சரே இங்கு ஆறு வந்தே பாரத் ரைல்கள் ஓடுகின்றன, நாங்கள் கேட்டமா? சாதாரண ரயில்கள் எங்கே ? தமிழர்களை சுரண்டுவதற்குத்தானே இங்கேயிருந்து வரிகள் மூலமாக சுரண்டியது போதாதா ? புயல் வெல்ல சேதத்திற்கு நிதி கொடுக்காமல் ஏமாற்றியது போதாதா ? எப்படி வெட்கமே இல்லாமல் இங்கு வந்து பேசுகிறீர்கள்? மக்கள் போன்கினால் இங்கு மத்திய அமைச்சர் யாரும் வர முடியாது, பேச முடியாது.


N Sasikumar Yadhav
ஜூலை 27, 2024 20:37

தமிழகத்தில் நடக்கும் நலதிட்டங்கள் அனைத்தும் மோடிஜி தலைமையிலான மத்தியரசு கொடுக்கும் நிதிதான் . தமிழகம் வசூலிக்கும் வரிப்பணம் தமிழக அரசின் சாராய கடை வருமானம் அனைத்தும் ஓசிக்கும் இலவசத்துக்கும் கோபாலபுர குடும்பத்துக்கும்தான் செல்கிறது இப்போதுகூட மோடிஜி தலைமையிலான மத்தியரசு செய்யும் நலதிட்டங்களில் ஆட்டய போட முடியாத கோபத்தில் கதறுகிறானுங்க


Kesavan
ஜூலை 27, 2024 18:38

பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு எந்த காலத்தில் நல்லது செய்ய இயலாது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல எந்த மாநிலத்துக்கும் பிஜேபியால் நல்லது நடக்காது பிஜேபி அரசு ஒழிந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் மெட்ரோவுக்கு காசு கொடுத்தீங்களா கொடுக்கலையா அத சொல்லுங்க


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 20:29

அடுத்த பேக்கேஜ் போடவா? ஆச தோச அப்பளம் வட.


V Subramanian
ஜூலை 27, 2024 17:56

Tamil Nadu's overall share in the Union Budget 2024-25 reflects a significant increase in financial support, with a 94.95% rise in tax devolution and a 157.58% increase in Grants in Aid compared to previous periods. The allocation of ₹50,873.76 crore highlights the central government's dedication to supporting Tamil Nadu's economic growth and development.


V Subramanian
ஜூலை 27, 2024 17:50

Budget Outlay for Tamil Nadu The Union Minister stated that a record allocation of Rs.6,362 Crores has been allocated for the state of Tamil Nadu for FY 2024-25 which is 7 times the average outlay of Rs.879 Crores in 2009-2014. 22 projects spanning across 2,587 kms at a cost of Rs. 33,467 Cr are in progress, the Minister added. The Minister mentioned that 77 railway stations in Tamil Nadu are being redeveloped under the Amrit Bharat Station Scheme. 1,302 Km new tracks, 2,152 Km of Electrification and 687 flyovers/Under passses, have been completed in the state of Tamil Nadu in the last decade, the Minister added.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 27, 2024 17:22

வந்தே பாரத் பிஸ்னஸ் மேன் போவான் சாமானியன் போக வர ஒரு மண்ணும் இல்லை. ஸ்டேஷன் டெக் கரேசன் செலவை இரயில் போக்குவரத்தில் சேர் து சொல்லாதீர்கள் டூ வீலர் நிப்பாட்ட துட்ட புடுங்கிரான்


Swaminathan L
ஜூலை 27, 2024 16:34

எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அது மற்ற மாநிலங்களை விட எவ்வளவு அதிகம் என்று தெளிவான தகவல்கள் தராமல் அதிகளவு நிதி ஒதுக்கீடு என்று பொத்தாம் பொதுவாக ஏன் மத்திய அமைச்சர் பேசுகிறார்? வந்தே பாரத் இரயில்கள் அதிகம் ஓடுவது தமிழகத்தில் என்பது நல்ல செய்தி தான். இது மேல்தட்டு மக்களுக்காக நடக்கிறது என்று எதிர்வினை பிறக்காமல் இருந்தால் சரி.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 19:25

மிகவும் முன்னேறிய மாநிலத்தில் வசதியான மக்கள்தானே அதிகம் இருப்பார்கள்?


Indian
ஜூலை 27, 2024 16:33

பட்ஜெட் ல தமிழகத்துக்கு என திட்டங்கள் இல்லை . அதனால் தான் போராட்டம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை