உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை பாதைகளில் பசுமை நெறிமுறை திட்டம் அமல்

சபரிமலை பாதைகளில் பசுமை நெறிமுறை திட்டம் அமல்

சபரிமலை:மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை பாதைகளில் பசுமை நெறிமுறை திட்டத்தை கேரளா அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின்படி சபரிமலை பாதைகளில் வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருமுடியில் பாலிதீன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும், ஸ்னாக்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை பாலிதீன் கவர்களில் கொண்டுவரும் பட்சத்தில் அதை காடுகளில் வீசி எறிய கூடாது என்பது போன்ற பிரசாரம் தன்னார்வ தொண்டர்களால் மேற்கொள்ளப்படுகிறது.இந்த பாதைகளில் பக்தர்கள் வீசும் பாலிதீன், உணவு பொருள்கள் பார்சல் செய்த பேப்பர்களை சேகரித்து எரிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீசி எறியும் பாலிதீன் மற்றும் பொருட்களால் வன விலங்குகளுக்கும் வனச் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே இப்படிப்பட்ட பொருட்களை உடனுக்குடன் சேகரித்து எரியூட்ட திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிரீஸ் குளோபல் டிரேடர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஊழியர்கள் வனத்துறை சுற்றுச்சூழல் காவலர்களுடன் இணைந்து தினமும் அரை டன் குப்பை சேகரிக்கின்றனர்.பக்தர்கள் உபயோகித்த பொருட்களை துாக்கி எறியாமல் அதற்குரிய இடங்களில் போடுவதற்காக செங்கனுார் ரயில் நிலையம் முதல் பம்பை வரை ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பம்பை நதியில் பக்தர்கள் தங்கள் ஆடைகளை விட்டு செல்லாமல் கரையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி தொட்டிகளுக்குள் போடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலிதீன் பைகளை வாங்கிவிட்டு துணிப்பை வழங்குதல், துண்டு பிரசுரங்கள் வினியோகம், துாய்மை பணியாளர்களை ஊக்குவித்தல் போன்றவையும் இந்த பசுமை நெறிமுறை திட்டத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை