உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அதிர்ந்த மளிகை கடைக்காரர்

ரூ.141 கோடிக்கு விற்பனை வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அதிர்ந்த மளிகை கடைக்காரர்

புலந்தசாஹர் : உத்தர பிரதேசத்தில், 141 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ததாக சிறிய மளிகைக் கடைக்காரருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அந்த சிறு வணிகர் அதிர்ச்சியில் உறைந்தார். உ.பி.,யின் புலந்தசாஹரில் உள்ள குர்ஜா நயாகன்ஞ் பகுதியில் வசித்து வருபவர் சுதீர். இவர் தன் வீட்டில் இருந்தபடியே சிறிய மளிகைக்கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், வருமான வரித் துறையிடம் இருந்து கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதை பிரித்து படித்த சுதீர் அதிர்ச்சியில் உறைந்து போனார். காரணம், அதில் 141 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதால், அதற்கான வரியை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக குர்ஜா போலீஸ் ஸ்டேஷனில், சுதீர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தன் பான் கார்டு எண்ணை பயன்படுத்தி, டில்லியில் உள்ள சில நிறுவனங்கள் மோசடியாக வர்த்தகம் செய்திருப்பதாக சுதீர் குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கி கணக்கு துவங்க, போலி நிறுவனங்களை உருவாக்க, வங்கி கடன்கள் பெற, வரி ஏய்ப்பு செய்ய என பல விதங்களில் ஒருவரது பான் கார்டு எண்ணை பயன்படுத்தி மோசடி செய்ய முடியும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அறிமுகம் இல்லாத நபர்களிடம் பான் எண் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P.Sekaran
செப் 02, 2025 10:24

பான் நம்பரை கொடுத்து ஒருவன் தொழிலோ ஏதாவது தொழில் தொடங்கினால் அந்த நபருக்கு முதலில் போன் செய்து நீங்கள் இந்த தொழில் துவங்க போகிறீர்கள் சம்மதமா என்று கேட்டுவிட்டு அதன் பிறகு அனுமதி கொடுத்தால் இந்த தவறு நடக்காது. பான் கார்டு அப்ளை செய்யும்பொழுது செல் நம்பர் கொடுத்திருப்பார்கள் அந்த நம்பருக்கு அல்லது முகவரிக்கு கடிதம் அனுப்பி உறுதிமொழி பெற்றபிறகு செய்தால் இந்த தவறு நடக்காது. அரசும் இதில் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். தட்டிக்கழிக்க முடியாது. ஒன்று கட்டாயம் என்றால் அதில் உள்ள தவறுகளை களைய்வதும் அரசின் கடமையே


D Natarajan
செப் 02, 2025 08:41

அந்த போலி நபர்களுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். பிணை கொடுக்கவே கூடாது


Barakat Ali
செப் 02, 2025 08:29

எல்லோ டவல் இருந்தவரை மறந்தும் கூட வ வ துறை கோலுமாலுபுரத்து ஊட்டுல காலடி எடுத்து வைச்சதில்ல .......


அப்பாவி
செப் 02, 2025 08:28

அடுத்தவன் பான் நம்பரை வெச்சு மோசடி செய்யறவங்களை பிடிக்க துப்பில்லேன்னாலும் பாதிக்கப் பட்டவரை இன்னும் கடுமையா டார்ச்சர் செய்வாங்க. பேங்க்கில், இன்கம்டாக்ஸில் தான் பேன் நம்பரை குடுக்கிறோம். அவிங்களே அடுத்தவங்களுக்கு வித்திருப்பாய்ங்க. நல்லா விசாரியுங்க. எங்கே விசாரிக்கப் போறீங்க?


Mahendran Puru
செப் 02, 2025 08:17

பாஜகவிற்கு நிதி கொடுத்தால் நோட்டீசு வாபஸ் வாங்கப்படும். இந்த சேவை வரி, அமலாக்கம் எல்லாம் நிதி வசூல் துறைகள், பாஜகவிற்கு. வாழ்க பாரதம். வளர்க தேசியம்.


அப்பாவி
செப் 02, 2025 07:26

அமரிக்காவே 50 பர்சண்ட் டாரிஃப்.போட்டு தாக்கும்.போது இவிங்க பங்குக்கு உருவ வேணாமா?


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 04:04

அடப்பாவிங்களா


Ramesh Sargam
செப் 02, 2025 03:59

அலட்சியமாக செயல்பட்ட அந்த வருமானவரி அதிகாரிகளை பணியிலிருந்து உடனே நீக்கவேண்டும்.


Kasimani Baskaran
செப் 02, 2025 03:58

பாண் மோசடி இது போல நிறைய உண்டு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை