உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., கைது விபரங்கள் : சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜி.எஸ்.டி., கைது விபரங்கள் : சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், வரி செலுத்தாதவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், சுங்க சட்டம் மற்றும் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டங்ளுக்கு எதிராக, 281 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பீலா திரிவேதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் சில அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், இது தனிநபர்களின் சுதந்திரத்தை பறிப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு கோடி ரூபாய் முதல், ஐந்து கோடி ரூபாய் வரையிலான வரியை செலுத்தாத நபர்களுக்கு ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் மற்றும் கைது நடவடிக்கை விபரங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம். விதியில் தெளிவின்மை இருப்பதைக் கண்டால், அதைச் சரிசெய்வோம். எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை கூடாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
மே 04, 2024 17:13

மத்திய பாஜக அரசு எல்லா விஷயங்களிலும் அத்து மீறி நடக்கும் போது உச்சநீதிமன்றத்தின் தலையீடு அத்தியாவசியமானதாக ஆகி விடுகிறது!


ராம்கி
மே 05, 2024 09:42

GST கவுன்சில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைசர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது இதை நீர் அரைகுறையாக புரிந்துகொள்ளாமல் மத்திய அரசை காழ்ப்புணர்ச்சியுடன் குறை கூறுகிறீர் இதை அரசியலாக்கி வேடிக்கை பார்ப்பது நகைப்புக்குரியது


தமிழ்வேள்
மே 04, 2024 15:32

ஜிஎஸ்டி வரி செலுத்த முடியாதவர் எப்படி கோடிகள் கொட்டி சொத்துக்கள் கார்கள் வாங்குகிறார்?


ஆரூர் ரங்
மே 04, 2024 11:09

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட தானே சூப்பர் என எந்த அமைப்பு கருதினாலும் அதனை அடக்கி வைக்க மத்திய அரசு தயங்கக் கூடாது. 75 ஆண்டுகளில் வருமான வரிஏய்ப்புக்காக ஐந்தாறு பேர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளனர்.


Ravi Kulasekaran
மே 04, 2024 08:56

உச்ச நீதிமன்றம் தனக்கு அதிகாரம் இருபத்தாக நீதித்துறைக்கும் அரசியல் மக்காளால் தேர்ந்த எடுத்த அரசுக்கும் ஒரு போட்டி ஜனநாயக நாட்டில் இருக்கும் ஜானதிபதி மத்திய அரசு கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்து வேண்டும் அதற்கு பொது வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி ஆட்சி முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதே அது போன்ற நடவடிக்கைகள் தேவை


Kasimani Baskaran
மே 04, 2024 07:20

ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் கண்டிப்பு கூடாது என்றால் வரி ஏய்ப்பு பரவாயில்லை? நீதிபதிகளுக்கு சம்பளத்தையும் அதே போல நீக்குப்போக்காக கொடுக்கலாமா? வருமான வரி கூட ஏன் கட்ட வேண்டும்? வரி கட்டாமல் ஏமாற்றுவது ஓக்கே என்ற மனப்பான்மைதான் இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது மற்ற நாடுகளில் வரி வசூலுக்கு காட்டும் கண்டிப்புத்தான் அவர்களை வாழ வைத்திருக்கிறது


GMM
மே 04, 2024 07:10

வருவாயின் அடிப்படையில் தான் வரி முதலில் வரி செலுத்த வேண்டும் அல்லது வரியை டெபாசிட் செய்ய வேண்டும் பல ஆயிரம் பேர்கள் வரி செலுத்த, சிலர் வழக்கு ஏன்? சில ரூபாய் வீட்டு வரி செலுத்த வில்லை என்றால், பழைய சட்ட பிரிவு கொண்டு, பல லட்சம் விலையுள்ள வீட்டிற்கு சப்தி நோட்டீஸ் நிறையா சீர் செய்ய வேண்டும் நாட்டின் மீது அக்கறை தேவை


Dharmavaan
மே 04, 2024 07:09

தவறு செய்பவனை தண்டிக்காமல் குற்றத்துக்கு துணை போகும் நீதி


thangaraj
மே 04, 2024 05:28

ஜி எஸ் டி யில் ஆடிட்டரே புரிந்துகொள்ள முடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன தாறுமாறாக அபராதம் விதித்து சிறு தொழில் செய்வோர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் அரசு கசக்கி பிழிகிறது என்று கூறுகிறார்கள் அரசு தனக்கு வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது நீதிமன்றம் நல்ல நடவடிக்கை எடுப்பது அவசியம்தான் அய்யா தங்கராஜ் ஈரோடு


kannan
மே 04, 2024 04:46

பாஜக வில் போன மாதம் சேர்ந்த ராதிகா சரத்குமார் GST பாக்கி என்று ஒரு செய்தி வந்ததே


தாமரை மலர்கிறது
மே 03, 2024 23:00

கோர்ட் அனாவசியமாக மத்திய அரசின் வேலைகளில் மூக்கை நுழைப்பது ஆபத்தானது ஜிஎஸ்டி வரி வசூல் மாதொந்தோறும் அதிகரித்துவரும்போது, வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவின் வளர்ச்சி மீது பொறாமை கொண்டு சில அக்கப்போர் ஆசாமிகளிடம் சொல்லி அக்கப்போர்களை அவிழ்த்துவிடுகிறார்கள் இதற்கு சுப்ரிம் கோர்ட் இறையாகிவிடக்கூடாது தேர்தல் கமிஷனை எப்படி நம்பவேண்டும் என்று சொன்ன கோர்ட் அதே மாதிரி மத்திய அரசையும் நம்பவேண்டும் அனாவசியமாக மூக்கை நுழைக்க கூடாது


Dharmavaan
மே 04, 2024 07:10

எல்லாவற்றிலும் வரம்பு மீறுகிறது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ