உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9% அதிகம்

செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9% அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி செப்டம்பர் மாதம் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு (2024) செப்., மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதனிடையே ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த (செப்டம்பர்) மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u61m0v6f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.முந்தைய மாதங்களில் ஜிஎஸ்டி வசூல்* ஆகஸ்ட் மாதம் -ரூ.1.86 லட்சம் கோடி* ஜூலை மாதம் - 1.96 லட்சம் கோடி* ஜூன் மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி* மே மாதம் - ரூ.2.01 லட்சம் கோடி* ஏப்ரல் மாதம் - ரூ.2.36 லட்சம் கோடி* மார்ச் மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி* பிப்., மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி* ஜன., மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
அக் 01, 2025 20:24

சூப்பர். வரி வருமானம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியை காட்டுகிறது. அடுத்த ஐந்தாண்டில், ஜிஎஸ்டி மாத வசூல் பத்து லட்சம் கோடியை தாண்டும்.


Thravisham
அக் 01, 2025 19:01

வரும் மாதங்களில் ஜிஸ்டி கண்டிப்பாக 2.40 லட்சம் கோடியை மிக எளிதாக தாண்டும்.


KOVAIKARAN
அக் 01, 2025 18:11

GST குறைக்கப்பட்டது 22.09.2025 லிருந்துதான் அமலுக்கு வந்துள்ளதால், இனிவரும் மாதங்களில், ஜிஎஸ்டி வசூல் இன்னும் அதிகமாக இருக்கும். ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நாடு வளரட்டும். நம் நாட்டு மக்களின் வளம் பெருகட்டும் என்று இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் வாழ்த்துவோம்.


ஆரூர் ரங்
அக் 01, 2025 16:02

வரிஏய்ப்பு கட்டுப்படுத்தபட்டுள்ளதால் வரி விகிதம் குறைக்கப்பட்டும் வசூல் கூடியுள்ளது . வரிஏய்ப்பு முதலைகள்தான் ஜிஎஸ்டி எதிர்ப்புக்குப் பின்னால் இருக்கிறார்கள்.


vns
அக் 01, 2025 15:49

வரி செலுத்தும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. திரு மோடி மற்றும் திருமதி நிர்மலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை