உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.65 லட்சம் கோடி

டிசம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.65 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,64,883 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,64,883 கோடி ரூபாய் ஆக உள்ளது.இதில்,சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,443 கோடியும்எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,935 கோடியும்ஐஜிஎஸ்டி மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து)செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 டிசம்பர் மாதம் வசூல் ஆன தொகையை விட 10.3 சதவீதம் அதிகம் ஆகும்.

7வதுமுறை

2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.97 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ.13.40 லட்சம் கோடி தான் வசூலாகியிருந்தது. 2023 டிசம்பரில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் 9888 கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டு டிசம்பரை காட்டிலும் 19 சதவீதம் அதிகம். மஹாராஷ்டிரா (26,814 கோடி ரூபாய்), கர்நாடகா (11,759 ) மாநிலங்கள் தமிழகத்தை காட்டிலும் அதிக வரி வசூலித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 02, 2024 00:41

இந்த செய்தியை அரைகுறையாக படித்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அந்த உதவாக்கரை அமைச்சர், 'இது உங்கள் அப்பன் வீட்டு பணமா?' என்று கேள்வி கேட்டு அதில் பங்கு கேட்க மிக அதிக வாய்ப்புண்டு.


வெகுளி
ஜன 01, 2024 18:28

ரூ.1.65 லட்சம் கோடிய அப்படியே மொத்தமா எடுத்து எங்ககிட்ட புறங்கை சுவைக்க குடுத்தா நீங்க மத்திய அரசுன்னு சொல்லுவோம்... இல்லையின்னா உங்களை ஒன்றிய அரசுன்னு கூவுவோம்..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ