உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி குறைப்பா? செப்.,9ல் முடிவு தெரியும்

மருத்துவ காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி குறைப்பா? செப்.,9ல் முடிவு தெரியும்

புதுடில்லி: மருத்துவ காப்பீட்டுக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து வரும் 9 ம் தேதி நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருந்தார். வரி ரத்து, குறைப்பு செய்தல் என 4 பரிந்துரைகளை, மத்திய, மாநில அதிகாரிகள் இடம்பெற்றுள்ள பிட்மென்ட் குழு நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்., 9 ம் தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. பிட்மென்ட் குழு அளித்த பரிந்துரை குறித்து பரிசீலனை செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது. அதில், வரி ரத்து என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசுக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படக்கூடும். மற்றொரு பரிந்துரையாக, மூத்த குடிமக்கள் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கலாம் எனக்கூறப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2,100 கோடி இழப்பு ஏற்படும்மூத்த குடிமக்களுக்கு மட்டும் காப்பீட்டில் வரிவிலக்கு அளிக்கலாம் இதனால் ரூ.650 கோடி மட்டுமே இழப்பு ஏற்படக்கூடும்.மற்றொரு பரிந்துரையாக, மருத்துவ காப்பீட்டுக்கு 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1700 கோடி இழப்பு ஏற்படும். இதில், எந்த பரிந்துரை ஏற்கப்படும் என்பது குறித்து வரும் 9 ம் தேதி தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sugumar s
செப் 05, 2024 20:18

These hospitals, medical insurance companies and IRDA join and form rules not in public interest. e.g. during hospitalization many expenses are disallowed saying limits and consumables. If consumables are disallowed then why the hospitals are using them? we need court intervention to revise the rules


KRISHNAN R
செப் 05, 2024 20:05

ஜி எஸ் டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காக பெரும்பாலான நுகர்வு க்கு. ... அதிகம் கூடாது


ஆரூர் ரங்
செப் 05, 2024 18:51

மருத்துவ காப்பீட்டுக்கு வரிவிதிப்பு பசி காலத்திலேயே அறிமுகமாகியது . இப்போ அந்த ஆள் கள்ள மவுனம்.


nagendhiran
செப் 05, 2024 16:19

ஏன் ஜிஎஸ்டி முன்பு வரியே இல்லாமலா இருந்தது?


sundarsvpr
செப் 05, 2024 16:13

வரி விதிப்பிற்கு குரல் கொடுக்கும் நபர்கள் ஏன் வரி ஏய்ப்புசெய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. இவர்களுக்கு கை கூலியாக எதிர் கட்சிகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதை தவிர்த்தால் வரி ஏய்ப்பு செய்பவர்கள் நிச்சியம் தண்டிக்கப்படுவார்கள்.


புதிய வீடியோ