உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாகனங்களின் விலையை ரூ.1.45 லட்சம் வரை குறைக்கிறது டாடா மோட்டார்ஸ்

வாகனங்களின் விலையை ரூ.1.45 லட்சம் வரை குறைக்கிறது டாடா மோட்டார்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக பயணிகள் வாகனங்களின் விலையை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1.45 லட்சம் வரை குறைக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஜிஎஸ்டி சீரமைப்பு வரும் 22ம் தேதி முதல் அமலாகிறது. இதில் சிறிய ரக வாகனங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கார்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை குறைக்க போவதாக அறிவித்துள்ளது.இதன்படி சிறிய கார் மாடலானதியாகோ - ரூ.75 ஆயிரம்டைகோர் - ரூ. 80 ஆயிரம்ஆல்ட்ரோஸ் - ரூ.1.10 லட்சம் வரையில் விலை குறைய உள்ளது.அதேபோல் கர்வ்வி- ரூ.65 ஆயிரம்எஸ்யுவி மாடலானஹாரியர் மாடல் ரூ.1.4 லட்சம் வரையிலும்சபாரி ரூ.1.45 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

saarathy chandru
செப் 06, 2025 19:26

எல்லாம் சரி சந்தோஷம்தான். வங்கிகள் கடன் கொடுக்கிறது. எல்லோருக்கும் வானங்கள் வாங்குவதற்கு ஆசைதான் பெரும்பாலானோர் வாகனங்களை முறையாக இயக்குவதில்லை .சரியான சமிக்ஞை செய்வதில்லை. மேலும் தற்போது வரும் வாகனங்கள் சமீப காலமாகவே வண்டி ஆன் செய்தவுடன் முகப்பு விளக்கும் எரிகிறது.தவிர ,அதிக பிரகாசம் கொண்ட விளக்குகள் கண்ணை கூசும் வகையில் நாலு ஆறு லைட்டுகள். மோட்டார் வாகன சட்டத்தை யாரும் மதிப்பதில்லை .எப்போதும் சாலையின் இடதுபுற ஓரமாக செல்ல வேண்டும் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். காவல்துறையோ அரசாங்கமோ வாகன ஓட்டிகளின் தவறுகளை கண்டு கொள்வதில்லை.அரசியல் கட்சி கொடிகள் கட்டிக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்பது நடைமுறையில் உள்ளது. வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப்ப சாலை வசதிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும்.சாலை விபத்துகளை குறைப்பதற்கு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tamilan
செப் 06, 2025 00:59

இத்தனை வருடங்களாக இதற்க்கு மேலும் பலமடங்கு தங்குதடையின்றி மோடி அரசின் உதவியுடன் மக்களிடம் உலகமெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் படுபாதகர்கள் .


புதிய வீடியோ