உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

புதுடில்லி: ஜிஎஸ்டியில் 4 வரி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும் 18 சதவீத வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஏற்கனவே இருந்த 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக, பைக்குகள், கார்கள், மருத்துவ மற்றும் தனி நபர் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டியும் குறைகிறது. இது அனைத்தும் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.இதன் பிறகு டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வரி அடுக்குகளை குறைத்துள்ளோம். இனிமேல் இரண்டு அடுக்குகள் தான் இருக்கும். செஸ் வரி இழப்பீடு குறித்து ஆலோசித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளுக்கு ஊக்கமளிக்கும். அடுத்த தலைமுறை சீர்திருத்தத்துக்கு பிரதமர் மோடி குரல் கொடுத்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜிஎஸ்டி சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு பலனளிக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை, மருத்துவ துறைக்கு நல்ல பலன் கிடைக்கும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வரி குறைக்கப்பட்ட பொருட்கள் விபரம்

5 சதவீதம் ஆக குறையும் பொருட்கள்ஹேர் ஆயில்கள், டாய்லட் சோப்கள், சோப் பார்கள், ஷாம்புக்கள், டூத் பேஸ்ட்கள், சைக்கிள்கள், மேஜை பாத்திரங்கள், அடுப்பு உபயோக பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்வரி இல்லாத பொருட்கள்Ultra-high temperature milk, சென்னா, பனீர், இந்தியன் பிரட்கள், ரொட்டி ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி5 %ல் இருந்து பூஜ்ஜியமாக குறைப்பு12, 18 % ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்நொறுக்குத்தீனி, சாஸ், பாஸ்தா, இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சாக்லேட், காபி, கார்ன்பிளேக்ஸ், வெண்ணெய், நெய்,பதப்படுத்தப்பட்ட இறைச்சி 5 சதவீதம் ஆக குறையும் பொருட்கள்ஏசி, 32 இஞ்ச் டிவி, டிஸ்வாஷிங் மிஷின்கள், சிறிய கார்கள், 350சிசி இன்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் 33 உயிர்காக்கும் மருந்துகள் மீதான 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி 0 ஆக்கப்பட்டுள்ளது.புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்க்கான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து பூஜ்ஜியம் ஆகவும்ஏராளமான மருந்துகள் மீதான ஜிஎஸ்டியும் 12ல் இருந்து 5 சதவீத வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்புடிரக்குகள் , பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாகவும் ஆட்டோ உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி ஒரே மாதிரியாக 18 சதவீதமாக இருக்கும்.3 சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக இருக்கும்.ஜவுளித்துறையை பொறுத்தவரை மனிர்களால் உருவாக்கப்பட்ட பைபர் மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாகவும்சல்பியுரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மற்றும் அமோனியா மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக இருக்கும்.மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைப்புபுதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.டிராக்டர், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் இயந்திரங்கள், அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 5 சதவீதமாக குறைகிறது12 குறிப்பிட்ட பூச்சிக் கொல்லிகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைப்புகைவினைபொருட்கள், பளிங்கு, கிரானைட் , தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவதம்சிமென்ட் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 ஆகவும்ஜிஎஸ்டியில் அனைத்து பொருட்களும் 18 மற்றும் 5 சதவீதத்தில் அடங்கும். சிறப்பு வகிதமாக 40 சதவீத வரி இருக்கும். இதில் ஆடம்பர பொருட்கள் அடங்கும். பான் மசாலா, சிகரெட், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் (புகையிலை, ஜர்தா, பீடி) ஆகியற்றுக்கு 40 சதவீத வரி இருக்கும்.சர்க்கரை, இனிப்பு பொருள் அல்லது சுவையூட்டப்ப்டட காபின் கலந்த பானங்கள், கார்பனேட் ஏற்றப்பட்ட பானங்கள், பழச்சாறு கொண்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்ட பொருட்களும் 40 சதவீதத்தின் கீழ் வரும்.தனி நபர் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ரூ.2,500க்கு கீழ் விலை கொண்ட காலணிகளுக்கு 5 சதவீதமும்ரூ.2 ,500க்கு மேல் விலை கொண்ட காலணிகளுக்கு 18 சதவீதமும்மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகவும்நடுத்தர மற்றும் பெரிய கார்கள், மோட்டார சைக்கிள்கள், ஹெலிகாப்டர்கள், தனிநபர்களுக்கான விமானங்கள், உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 08:24

தமிழக முதல்வர் லண்டனில் இருந்து திரும்பியதும் தீபாவளி இனாம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் ஐந்தாயிரம் தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை கேஸ் சிலிண்டர் மானியம் ரூபாய் நூறு மின் கட்டணம் முதல் இருநூறு யூனிட் வரை இலவசம் மகளிர் உரிமைத் தொகை மாதம் இருமுறை ஆயிரம் ஆயிரம் அனைத்து பேருந்துகளிலும் ஒரே கட்டணம் ரூபாய் பதினைந்து இலவச சைக்கிள் இலவச லேப்டாப் அனைத்து கல்லூரிகள் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி அனைத்து மருத்துவ முறைகளிலும் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பத்து இலட்சம் இவைகள் எல்லாம் தீபாவளிக்கு அறிவித்தாலும் அறிவிக்கலாம் என்ற ஆசை எனக்கு உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை.


Kannan Chandran
செப் 04, 2025 00:40

விடியல் தலிவர் காண்டாக போறாரு..


Akash
செப் 04, 2025 00:29

What about imports from US ?


Oviya Vijay
செப் 04, 2025 00:01

இதுவரை மக்களிடம் கொள்ளையடித்து பாவம் செய்ததற்கு தாங்களாகவே செய்து கொள்ளும் பிராயச்சித்தம் இது... உலக அரங்கில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் இந்தியாவில் குறைக்காமல் இது நாள் வரையிலும் பல லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தாகி விட்டது... பின்னர் என்ன??? உலக அரங்கில் சந்தை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசு அதில் தலையிடுவதில்லை என மத்திய அரசு கூறி மக்கள் தலையில் மிளகாய் அரைத்தது நினைவில் வைத்துள்ளோம்... அப்படி இருக்கையில் உலக அரங்கில் பெட்ரோல் டீசல் விலை பலமுறை குறைந்தும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஏன் விலையைக் குறைக்கவில்லை... அப்படியெனில் இவ்வளவு நாட்கள் மத்திய அரசு சொல்லி வந்தது பொய்... இந்த கேள்விக்கு மட்டும் பிஜேபி தலைகளிடம் முக்கியமாக நிம்மி மா.மியிடம் பதில் கிடைக்காது... ஆனால் மக்களிடம் இதற்கு பதில் உண்டு... தேர்தல் அன்று...


Tamilan
செப் 03, 2025 23:47

என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் எதுவும் எடுபடாது


Tamilan
செப் 03, 2025 23:46

திமுக இந்தியா கூட்டணி மீது இருக்கும் தேர்தல் பயம்


Tamilan
செப் 03, 2025 23:44

இவ்வளவு நாட்களாக வரி போட்டது யார்


Natarajan Ramanathan
செப் 03, 2025 23:36

கிட்டத்தட்ட ஒரு மினி படஜெட் அளவுக்கு ஏராளமான வரி குறைப்பு/சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனி நபர் காப்பீட்டுக்கு GST நீக்கம் மிகநல்ல விஷயம்.


புதிய வீடியோ