உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்; மீட்பு பணி தீவிரம்

குஜராத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்; மீட்பு பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில், 540 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம் பெண் விழுந்துள்ளார். அந்த பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் 540 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில், 18 வயது பெண் ஒருவர் தவறி விழுந்தார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுக்கள் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 490 அடி ஆழத்தில் சிக்கி உள்ள பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6:30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது.இது குறித்து செய்தியாளர்களிடம் கட்ச் மாவட்ட அதிகாரி அருண் ஷர்மா கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Lawrence
ஜன 08, 2025 16:47

இதற்கு முழுக்க முழுக்க காரணம் அரசாங்கமே ஏனென்றால் விவசாய மின் இணைப்பு வேண்டுமென்றால் ஆழ்துளை கிணறு தோண்டி 10 ஆண்டுகள் ஆன பின்பு கூட மின் இணைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இலவச மின் இணைப்பு கொடுக்கும் போது ஆழ்துளை கிணறு அமைத்தால் இது போன்ற விபத்துக்கள் தடுக்கப்படும். மின்வாரியம் சற்று முறைகளை மாற்றினால் இது போன்ற விபத்து தடுக்கப்படும்


M.Malini
ஜன 08, 2025 06:27

ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். பாதுகாப்பு வேலி அமைக்கத்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜன 07, 2025 12:28

ஆழ்துளை கிணறு தோண்டிவிட்டு மூடாமல் வைத்திருப்பவர்களை தண்டித்தால் தான் இதுபோன்ற விபத்துக்கள் குறையும். இல்லையேல் வாம் ஒரு விபத்து நடக்கும்.


Ramesh Sargam
ஜன 07, 2025 12:21

முன்பெல்லாம் சிறு குழந்தைகள், சிறுவர்கள் விழுவார்கள். முதல்முறையாக 18 வயது பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் காலம் காலமாக நம்நாட்டில்மட்டும்தான் நடக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர முடிவு காண எந்த மாநில அரசும் முயற்சிப்பதில்லை. மத்திய அரசும் கண்டுகொள்வதில்லை. தமிழக - இந்திய - மீனவர்கள் பிரச்சினை மாதிரி இதுவும் ஒரு தொடர்கதை. தீர்க்க முடியாத பிரச்சினை. வெட்கம். வேதனை.


V RAMASWAMY
ஜன 07, 2025 11:58

ஏன் இதற்கான விழிப்புணர்வோ முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளோ அரசு தரப்பிரமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் ஏற்படவில்லை, இத்துணை மரண விபத்துகள் ஏற்பட்டும்? ஆழ்துளை கிணறுகள் வெட்டுவதற்கு அனுபதி பெறவேண்டும், அனுமதி பெற்றபின் அந்த இடத்தை சுற்றி தடுப்பு வெளி அபாயம், ஜாக்கிறதை என்கிற பதாகைகளுடன், தவிர தீயணைப்பு, காவல் துறை இவர்களின் அனுமதியும் பெறவேண்டும். இவையெல்லாம் கடைபிடித்தால், அநியாயமாக அப்பாவி குழந்தைகள் உயிர் பறிக்கப்படுவது தடுக்கப்பட முடியும்.


பாமரன்
ஜன 07, 2025 11:51

எதிர்பார்த்த மாதிரியே பக்கோடாஸ் கிறுக்குபுடிச்சி கருத்து போடுதுக ... அலட்சியமா இருந்த அரசை அதன் அதிகாரிகளை ஒரு பீஸும் கண்டுக்கலை... கண்டிக்கலை ... ஏன்னா நடந்திருப்பது குசராத்தாமா...


அருணாசலம்
ஜன 07, 2025 13:18

நீ ஏம்பா முதலில் கருத்து போடும்போது கண்டுக்கலை?


Kasimani Baskaran
ஜன 07, 2025 14:10

நீ நாள் முழுக்க பக்கோடா சாப்பிடு


Gokul Krishnan
ஜன 07, 2025 10:46

திருட்டு திராவிட அரசில் எத்தனை முறை பட்டாசு ஆலை விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிர் இழந்தனர் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் உயிர் இழந்தவற்கு ரெண்டு லட்சம் கள்ள சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் .. இது தான் திரவிட மாடல் .


Swamimalai Siva
ஜன 07, 2025 10:17

அடிக்கடி சராசரியாக மாதம் ஒரு நிகழ்வு. அந்த ஆழ் துளை கிணற்றின் உரிமையாளர் மற்றும் ஆழ் துளை கிணற்றின் ஒப்பந்தக்காரர் இவர்களை விசாரணை இன்றி தூக்கில் போட்டால் தான் இதற்கு விமோசனம் கிடைக்கும்.


Nandakumar Naidu.
ஜன 07, 2025 09:29

ஆழ்துளை கிணற்றில் எப்படி விழுகிறார்கள்? தள்ளப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. நம் நாட்டில் அடிக்கடி நடக்கிறது. ஆழ்துளை கிணற்றின் உரிமையாளரை அவரின் பொறுப்பற்ற செயலுக்காக (கிணற்றின் வாயை மூடாமல் விட்டதர்க்காக) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 07, 2025 09:26

மூடாத போர்வெல் ஓனரை உள்ளே தூக்கிப்போட்டால் கூட தப்பில்லை. எடப்பாடியும் மோடியும் உடனே நிபந்தனையில்லாமல் பதவி விலக வேண்டும் - இப்படிக்கு பாமரன்.


புதிய வீடியோ