உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்புகள் ஏராளம் கொண்ட புதிய விரைவுச்சாலை; 1,316 கி.மீ., தொலைவை 13 மணி நேரத்தில் கடந்து செல்ல உதவும்!

சிறப்புகள் ஏராளம் கொண்ட புதிய விரைவுச்சாலை; 1,316 கி.மீ., தொலைவை 13 மணி நேரத்தில் கடந்து செல்ல உதவும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகர் முதல் பஞ்சாபின் அமிர்தசரஸ் வரையில் 1,316 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவுச்சாலை, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விரைவுச்சாலை என பெயர் பெற்றுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரமும், பணமும் மிச்சமாகும்.தேசிய தலைநகர் டில்லியையும், மும்பையையும் இணைக்கும் வகையில் 1,350 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்ட விரைவுச்சாலையானது, நாட்டின் நீளமான விரைவுச் சாலை என்ற பெயரை பெற்றுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாவதால், அந்த சாலைக்கு வரவேற்பு கிடைத்து உள்ளது.இதனைத் தொடர்ந்து ஜாம் நகரையும், அமிர்தசரசையும் இணைக்கும் வகையில் மற்றொரு விரைவுச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையில் சிறப்பு அம்சங்கள்:* தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான தூரம் 1,516 கி.மீ., இதனை கடக்க 26 மணி நேரம் ஆகும்.* புதிய விரைவுச்சாலை மூலம் இந்த நகரங்களுக்கு இடையிலான தூரம் 200 கி.மீ., குறைந்து, 1,316 கி.மீ., ஆக இருக்கும்.* புதிய விரைவுச்சாலையில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் பறக்கலாம். இதனால் இரு நகரங்களுக்கான பயண நேரம் 13 மணி நேரமாக குறையும். *இச்சாலை, நான்கு மாநிலங்களில் (குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப்) உள்ள பதிண்டா, மோகா, ஹனுமன்கார்க், சூரத்கார்க், பிகானீர், நாகவுர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜாம் நகர் ஆகிய நகரங்களை கடந்து செல்லும்.* இச்சாலையானது, ராஜஸ்தானில் 500 கி.மீ., தூரம் பாலைவனத்தை கடந்து செல்கிறது. ஹரியானாவில் 100 கி.மீ., தூரம் செல்கிறது. இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள தொழிற்சாலை நகரங்கள் குஜராத்தில் உள்ள தொழிற்சாலை நகரங்களுடன் நேரடியாக இணைப்பு ஏற்படும்.* புதிய விரைவுச்சாலை டில்லி - காஷ்மீரின் காத்ரா இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் குஜராத்தில் இருந்து காஷ்மீர் செல்வது எளிதாக அமையும். * ரூ.80 ஆயிரம் கோடி செலவில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு ஜன., மாதம் இச்சாலை பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.* இச்சாலை அமைக்கப்பட்டுள்ள பதிண்டா, பார்மர் மற்றும் ஜாம் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்து உள்ளன. இதனால், எண்ணெய் போக்குவரத்திற்கான நேரம் கணிசமாக குறையும்* இச்சாலை அமைந்துள்ள நகரங்களில் வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தமிழ்வேள்
டிச 04, 2024 20:02

நாட்டில் திராவிடம் உள்ள வரை நெடுஞ்சாலை வராது..கரூர் பாலாஜியார் உ.பா.சாலை மட்டுமே வரும்..அதுவே அதிகம்


Sivagiri
டிச 04, 2024 18:57

பார்க்க / கேட்க நல்லாத்தான் இருக்கு , பத்து கிலோமீட்டருக்கு ஒரு டோலக்கேட்டை போட்டு வசூல் பண்ணும் போது தெரியும் - - எதோ மக்களுக்கு பிரயோஜனம் போல இருந்தாலும் , மணல் மாபியா / மெடிக்கல் மாபியா / போதை மாபியா / போல இதுவும் ஒரு ரோடு மாபியா தொழில் போல ஆகிவிட்டது . . .


VENKATASUBRAMANIAN
டிச 04, 2024 18:44

இங்கே விடியல் அரசு எதையுமே வரவிடாது. இல்லையென்றால் கன்யாகுமரி முதல் டெல்லி வரை இதுபோன்ற சாலை அமைந்திருக்கும். ஆனால் சேலம் சென்னை சாலையை அரசியல் செய்து வரவிடாமல் செய்து விட்டார்கள்.மனுஷ் என்ற கூலிக்காரன் திமுக விடம் காசு வாங்கி கொண்டு அதிமுக ஆட்சியில் எதிர்த்தான்.


Rasheel
டிச 04, 2024 18:31

1960 களில் அமெரிக்கா முன்னேற்றம் அடைந்ததிற்கு நெடும் சாலைகள் காரணமாக அமைந்தது. ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிப்பு தெரிவிக்காமல் இருந்தால் நாடு முன்னேறும். சந்திர பாபு நாயுடு இன்னும் பத்து ஆண்டுகளில் ஆந்திராவை மிக முன்னேற்றம் அடைய செய்வார். ஆனால் நாம்??


S Ramkumar
டிச 05, 2024 15:14

இன்னமும் சீனா போய்விட்டு வந்தவர்கள் சொல்லுவார்கள் எவ்வளவு பெரிய சாலைகள் என்று. அங்கு கேட்டு கேள்வியே கிடையாது. இங்கு??????


SENTHIL NATHAN
டிச 04, 2024 17:39

விடியாத ஆட்சிக்கு ஓட்டு பேட்டவர்கள் தங்கள் சந்ததிகள் வாழ்க்கையை நினைத்து பார்க்க வில்லை.


Sankar Ramu
டிச 04, 2024 18:29

தவறு. தன் பிள்ளைகளையும் அடிமையாக வளர்கிறார்கள்.


Giriraj
டிச 04, 2024 17:31

தெற்கும் வாழும் ஆனால், அதற்கு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும்.


M Ramachandran
டிச 04, 2024 17:30

வடக்கு வாழ்கிறது...ஏன் தெற்கை வாழவிடாமல் செய்வது திராவிட கும்பல். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளை தூண்டி விட்டு பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலிய்ய வராம செய்தது மறந்துடுச்சா. விமான நிலையம் வர எதிர்ப்பு தெரிவித்து ஆட்டம் ஆட்டிய தீ மு க்க இப்போ விவசாயிகளை அடக்கி கி ஸ்கொயருக்கு சாதமாக செயல் படுகிறதென அது கன்னைய்ய உறுத்த இல்லையா? குஜராத்தில் எதிர்பதில்லை வருது. முன்னேறுது


Giri Sukumar
டிச 04, 2024 17:13

The eight way lane is dead


sankaranarayanan
டிச 04, 2024 17:00

திராவிட ஆட்சியில்தான் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை சர்வே முடிந்து கற்களும் நட்டபின் வேண்டவே வேண்டாம் தூத்துக்குடி அனல்மின்சாராம் விரிவாக்கம் வேண்டாம் காப்பர் தொழிற்சாலை விரிவாக்கம் வேண்டாம் தங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் நீட் வேண்டாம் மீத்தேன் எடுக்க வேண்டாம் எண்ணெய் கிணறுகள் தோண்ட வேண்டாம் விஸ்வகரமா திட்டம் வேண்டாம் இப்படி எல்லாமே வேண்டாம் வேண்டாம் என்றுகூறிக்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாததால்தான் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று பிழைக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது யாரை சொல்லி இனி என்ன பயன் எல்லாமே போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று சொல்லிக்கொண்டு அமர வேண்டியதுதான் மிச்சம்


S S
டிச 04, 2024 16:48

வடக்கு வாழ்கிறது...


ராஜவேல்,வத்தலக்குண்டு
டிச 04, 2024 17:08

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது போல நீ இங்க எந்த ஒரு நல்ல திட்டத்தையும் வர விடாமல் மக்களை தூண்டி விட்டு போராட்டம் பண்ணிக் கொண்டே இருந்தீன்னா தெற்கு தேய்ந்து போய் வடக்கு வாழத்தான் செய்யும்.


Sankar Ramu
டிச 04, 2024 18:28

தெற்கு அடிமையாகிறது ஒரு குடும்பத்திற்கு. அவனுங்க மட்டும் வளரானுங்க.


முக்கிய வீடியோ