உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் லாரி, பிக்கப் வேன், ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; பதான் மாவட்டத்தில் உள்ள மோதி பிப்லி கிராமத்தின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, அவ்வழியாக இன்று (அக்.5) சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, சரக்கு லாரி தவறான திசையை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றின் மீது மோதியது. அதன் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றும், இரு பைக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதின.விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனர். விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ