உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்து, எடியூரப்பா மீது குற்றச்சாட்டு குணதரநந்தி மஹாராஜரு வருத்தம்

சித்து, எடியூரப்பா மீது குற்றச்சாட்டு குணதரநந்தி மஹாராஜரு வருத்தம்

ஹூப்பள்ளி: ''முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது குற்றஞ்சாட்டுவது சரியல்ல,'' என, வரூரு நவகிரஹ தீர்த்த மடத்தின் மடாதிபதி குணதரநந்தி மஹாராஜரு தெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையா மீதும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியல்ல. இது வருத்தமான விஷயம்.சித்தராமையா நல்ல முதல்வர். இவரது பெயரை மூடா முறைகேட்டில் இழுத்து வந்து, எடியூரப்பாவை போன்று கண்ணீர் விட செய்து, பதவியில் இருந்து கீழே இறக்கும் வேலையை செய்யக்கூடாது. இரண்டு தலைவர்கள் மீதும், குற்றஞ்சாட்டுவது சரியல்ல.இவர்கள், மாநிலத்தில் பல நற்பணிகளை செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர்கள். அரசியல் இறுதிகட்டத்தில் இருக்கும் இவர்கள் மீது, தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது வருத்தம் அளிக்கிறது. அரசியல் செய்யலாம். இதற்காக அழுக்கான அரசியல் செய்யக்கூடாது.திருப்பதி புனிதமான கோவில். இங்கு தயாராகும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்று செய்தவர்களை மன்னிக்கக் கூடாது. இதை கண்டித்து நாங்களும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ