உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 ஜவான்கள் வீர மரணம்

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 ஜவான்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரின் கீட்ஷ்வார் மாவட்டத்தில் சாட்ரோ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்தவர்களில் விமன் குமார், அரவிந்த் சிங் என ராணும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர்.இதே போன்று கத்துவா மாவட்டத்திலும் நடந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிக்ள சுட்டுக்கொல்லப்பட்டன்ர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
செப் 14, 2024 14:47

தீவிரவாதம் உலகிற்கும் மக்களுக்கு எப்போதும் தீமை. தீவிரவாதம் என்னும் புலி வாலை பிடித்து இழுத்து பலி ஆவதை விட வேண்டும்.


சுலைமான்
செப் 14, 2024 09:45

இந்த ராணுவ வீரர்களின் உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ராகூல்? செல்லும் தேசமெல்லாம் பிரிவினையை பேசுகீறர். நாட்டு நலனில் அக்கறை இல்லை. எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே பேசுகீறார்! இந்தியாவிற்குள் நுழையாதே!


Nandakumar Naidu.
செப் 14, 2024 08:22

தேசத்திற்காக உயிர் நீத்த இந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். ஜெய்ஹிந்த்.


Kasimani Baskaran
செப் 14, 2024 07:27

காங்கிரஸ் பலம் பெற்றால் அது நாட்டுக்கு கெடுதலாகவே இருந்து வந்திருக்கிறது.


முக்கிய வீடியோ