குர்மி சமூக போராட்டம் வாபஸ்: மத்திய அமைச்சருடன் பேச முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: ஜார்க்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சு நடத்துவது உறுதியானதை அடுத்து, அரசுக்கு எதிராக குர்மி சமூகத்தினர் நடத்திய போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. ஜார்க்கண்டில் வசித்து வரும் குர்மி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க கோரியும், குர்மாலி மொழியை அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வலி யுறுத்தியும் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் ரயில் மறியல் போராட்டத்தில் குர்மி சமூகத்தினர் ஈடுபட்டனர். மறியல் தண்டவாளங்களில் பாறைகளை நிரப்பியும், படுத்து உறங்கியும் குர்மி சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால், 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தென் கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே பிராந்தியங்களில் ரயில் போக்கு வரத்து முடங்கியது. இதையடுத்து, குர்மி சமூகத்தினருடன் பேச்சு நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது. கோரிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் குர்மி சமூகத்தினர் பேச்சு நடத்துவதும் உறுதியானது. இதையடுத்து, தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற குர்மி சமூகத்தினர் முடிவு செய்தனர். ரயில் நிலையம் அ னை த்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வீடு திரும்பினர். அதேசமயம், அமைச்சருடன் பேச்சு நடத்தும் வரை, தன்பாத் மாவட்டத்தில் உள்ள பிரதான் காண்டா ரயில் நிலையத்தில் போராட்டம் தொடரும் என, குர்மி சமூகத்தி னர் அறிவித்துள்ள னர்.
போலீஸ் ஸ்டேஷன் சூறை
ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரியை பாண்ட்ரா போலீஸ் ஸ்டேஷன் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு நேற்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதன் முடிவில், போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய அவர்கள், அங்கிருந்த போலீசாரையும் தாக்கினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.