உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஞானவாபி விவகாரம்: வாரணாசி கோர்ட் உத்தரவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு

ஞானவாபி விவகாரம்: வாரணாசி கோர்ட் உத்தரவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு

வாரணாசி: வாரணாசியில் ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்ய, மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து ஞான்வாபி மசூதி கமிட்டி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளது.உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகத்தில் ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது மசூதி வளாகம் கட்டப்பட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதால்,, அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையின்படி கோயில் இடிக்கப்பட்டது தெரியவந்தது.இந்நிலையில், ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியில் உள்ள நான்கு பாதாள அறைகளில் ஒரு அறையில் பூஜை செய்ய அனுமதி கோரி முன்னாள் பரம்பரை பூஜாரி சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன்படி, காசி விஸ்வநாதர் கோவில் பாதாள அறையில் பூஜைகள் செய்து இன்று வழிபாடு நடத்தினர்.இந்நிலையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், பூஜைக்கு தடை கோரியும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
பிப் 01, 2024 22:16

இஸ்லாமிய கொடுங்கோலர்கள் ஆட்சியில் செய்த கோவில் அழிப்பு அடாவடிகள் ஏறாளம். வாளுக்குப்பயந்தவர்கள் மதம் மாறினார்கள். பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். மீதம் இருந்தவர்கள் அடாவடிக்கு தப்பிய கோவில்களில் பூஜைகளை தொடர்ந்து நடந்தது. வெள்ளைக்காரர்கள் அவர்கள் பங்குக்கு கோவில்களை அழித்தார்கள். சட்டங்கள் மூலம் இந்து மதத்தை கட்டுப்படுத்தி அவர்கள் மதத்தை பரப்புவதை எளிதாக்கினார்கள். இன்று நிலமை வேறு. தவறுகள் சரி செய்யப்படும் காலம். இடையில் யார் வந்தாலும் அழிந்து போவது நிச்சயம்.


Rajamani K
பிப் 01, 2024 21:50

முஸ்லிம்கள் அறிய வேண்டியது... தன் நெஞ்சறிவது பொய்யற்க.


rsudarsan lic
பிப் 01, 2024 21:00

இந்த கீழ் கோர்ட்கள் ஏன் இதுமாதிரி விஷயங்களில் தலையிடுகின்றன? நேரடியாக உயர்நீதி மன்றமோ உச்ச நீதி மன்றமோ எடுத்தாள வேண்டிய விஷயம் இது. தவிர, மாறுபட்ட தீர்ப்புகளைத்தரும் போது அதற்கான காரணங்களையும் கீழ் நீதிமன்றங்கள் கவனிக்க த்தவறியதையும் எடுத்துரைக்க வேண்டும். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் நடந்த வழக்குவாதங்களுக்கு என்ன மதிப்பு ?


Seshan Thirumaliruncholai
பிப் 01, 2024 20:05

முஸ்லிம்களுக்கு தொழுகக்கு தனியாய் இடம் தேவையில்லை. மேற்கு நோக்கி எந்த இடத்திலும் தொழுகை செய்யலாம் மசூதிதான் என்ற கட்டாயம் இல்லை. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மசூதி கட்டியது சர்ச்சைக்கு உட்பட்டதால் பெருந்தன்மையை முஸ்லீம் காட்டவேண்டும்.


ராஜா
பிப் 02, 2024 05:10

அவர்களுக்கும் பெர்ந்தனன்மைக்கும் காதை தூரம். அப்படியொன்று இருந்திருந்தால் திருட வந்த இடங்களில் இருந்த கோவில்களை எல்லாம் இடித்து மசூதிகள் கட்டியிருக்க மாட்டார்கள்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ