உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிம் பராமரிப்பு - யார் பொறுப்பு? மாநகராட்சிக்கு காவல் துறை கேள்வி

ஜிம் பராமரிப்பு - யார் பொறுப்பு? மாநகராட்சிக்கு காவல் துறை கேள்வி

4 வயது குழந்தையின் மரணம் குறித்து டெல்லி காவல்துறை எம்சிடிக்கு கடிதம் எழுதியுள்ளது, திறந்த உடற்பயிற்சி உபகரணங்களை யார் பராமரிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்மேற்கு டில்லியின் மோதி நகர், ஏ பிளாக்கில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் உள்ளது. இங்கு திங்கட்கிழமை நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு உடற்பயிற்சிக் கருவி விழுந்து, அந்த சிறுவன் உயிரிழந்தான்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாநகராட்சிக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பூங்காக்களில் திறந்திருக்கும் ஜிம் உபகரணங்களை யார் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை அறிய மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் மேலும் நடவடிக்கை எடுப்பார்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி