உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்1 விசா கட்டண உயர்வு: அமெரிக்காவில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி

எச்1 விசா கட்டண உயர்வு: அமெரிக்காவில் பணியாற்றும் ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம் யாருக்கு பொருந்தும் என்ற விளக்கத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வைத்துள்ளவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டதால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் தற்போது எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.புதிய விதிகள் படி, எச் - 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்ச ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும். இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டணம் யாருக்கு பொருந்தும் என தெளிவாக விளக்கப்படாத காரணத்தினால், குழப்பம் நிலவி வந்தது.இந்நிலையில், அமெரிக்க குடியுரிமைத்துறை சார்பில் கட்டண உயர்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இதன்படி,எச்1பி விசா இல்லாமல், அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் செப்,., 21ம் தேதி அந்நாட்டு நேரப்படி 12:01க்கு பிறகு தாக்கல் செய்யும் விசாவுக்கு இக்கட்டணம் பொருந்தும். அதேபோல், செப்.,21ம் தேதி 12:01க்கு பிறகு தூதரக அறிவிப்பு அல்லது விமானத்திற்கு முந்தைய ஆய்வு ஆகியவற்றுக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் இது பொருந்தும்.விலக்கு அளிக்கப்பட்டவர்கள்எப்1 மாணவர் விசாவில் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் , எல் -1 விசாவில் பணியாற்றும் ஊழியர்கள், அமெரிக்காவில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.( எல்1 விசா மூலம் வெளிநாட்டில் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்கு சர்வதேச நிறுவனங்கள் மாற்றிக் கொள்வதற்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசா ஆகும்.எப்-1 விசா என்பது அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முழு நேரம் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசா ஆகும்)* ஏற்கனவே எச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விலக்கு* விசாக்களின் தன்மையை மாற்றக்கோரி மனு செய்தவர்களுக்கும், தங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டி அமெரிக்காவுக்குள் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்* செப்.,21க்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுககளுக்கு விலக்களிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவார்கள்.* அரிதாக, நாட்டின் நலனுக்காக ஒரு ஊழியர் பணியாற்றுகிறார். அவருக்கு மாற்றாக அமெரிக்காவில் வேறு யாரும் இல்லை என வேலை வழங்கும் நிறுவனம் கருதினால், இக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக்கோரலாம். இதற்கான ஆதாரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Veeraputhiran Balasubramoniam
அக் 22, 2025 06:29

அமெரிக்கா வேலைக்கு போவது சரி இல்லை எங்கிற கூட்டம்,,,, இதில் எத்தனி பேர் கிராமங்களில் முடக்கி கிராமத்தின் வளர்சிக்கு பாடு படுகிறீர்கள் என்றும் பதிவு செய்யுங்க அப்ப தெரியும் கிராம பற்று எது??? நாட்டு பற்று எது என்றும்..... நானும் அன்று அரசு பள்ளியில் படித்து விட்டு வேலை தேடி சென்னைக்கு பெற்றொரை ஊரில் விட்டு விட்டு வந்தவன்ஏன் என் பெற்றொரே என்னை சென்னைக்கு கூட்டி வந்து விட்டு சென்றார்கள்... என்கிற முறையில் பதிவிடுகிறென் பின் நாளில் அவர்கள் வயதான் காலம் என்னுடன் வந்து தங்க்கிய போது நான் அவர்களை கவனிக்கும் வசதி வாய்ப்புகளொடு இருந்தேன், இல்லை என்றால் அவர்கள் நிலையும் கிராமத்தில் முடங்கி போயிருக்கும், என் வாழ்க்கையும் கிராமத்தில் முடங்கி போயிருக்கும், என் குழந்தைகள் வாழ்க்கையும் கிராமத்தில்.... குழந்தை தொழிலாளர் ஆகி இருப்பர். இன்று அவர்களும் நல்ல படித்து முன்னேற்ற பாதயில் பயண்ணிக்கின்றாகள்... அது பெருமையாக ஊள்ளது, மனதளவில் பிரிந்து இருப்பது வருத்தம தான் ஆனால் அவர்கள் வாழ்க்கை வெற்றி பாதையில் பயணிப்பதை பார்க்கும் போது நான் சாதித்து உள்ளேண் என்று கர்வ்ம் கொள்கிறேன்


Balaji
அக் 21, 2025 22:53

அப்படி என்ன சந்தோஷம் உங்களுக்கு?


Vijay D Ratnam
அக் 21, 2025 22:01

இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எய்ம்ஸ், என்.ஐ.டி., ஜிப்மர், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பார்களாம். கல்வியை அறிவை கொடுத்த நாட்டுக்கு வேலை பார்க்காமல் எலும்புத்துண்டுக்கு அலையும் தெருநாய்கள் போல நோகாம வேலை பார்க்க அமேரிக்கா போயிடுவாய்ங்களாம். அடுத்தடுத்த தலைமுறை அங்கே செட்டிலாகிவிடும். எப்பவாவது இந்தியா வரும்போது கொசு கடிக்குது, நாத்தம் அடிக்குது, சத்தமா இருக்குது, சாக்கடை நிற்குது, குப்பை பறக்குது என்று அலப்பறை பண்ணவேண்டியது. இந்த பச்சை அயோக்கியத்தனத்தை ஒழித்துக் கட்டவேண்டும். இது போன்ற டாப் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 60 வயது வரை பாஸ்போர்ட் எடுக்கவே உரிமை கிடையாது என்று அரசு அறிவிக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 21, 2025 23:44

மிக மிக சரியாக கூறினீர்கள். ஆம் அவர்களும் ஒருவகையில் தேசதுரோகிகள்தான்.


Ramesh Sargam
அக் 21, 2025 23:47

ஆம் நீங்கள் மிக மிக சரியாக சொன்னீர்கள். அவர்களும் ஒருவிதத்தில் தேசதுரோகிகள்தான். அப்படிப்பட்டவர்கள் இந்தியாவுக்குள் வரவேண்டுமென்றால் அவர்களிடம் இருந்து 1 கோடி அல்லது 2 கோடி என்று நுழைவு கட்டணம் வசூலிக்கவேண்டும் அவர்கள் வொவொருமுறை இந்தியாவுக்குள் வரும்போதெல்லாம்.


Ramesh Sargam
அக் 21, 2025 23:55

உங்களின் இந்த சிறப்பான கருத்தை நான் அப்படியே காப்பி செய்து மறுபதிவு செய்கிறேன். அப்படி செய்வதற்கு மன்னிக்கவும். நன்றி.


KOVAIKARAN
அக் 21, 2025 21:41

எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம் ஏற்கனவே வைத்துள்ளவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டதால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்பது செய்தி. டிரம்ப் அவர்கள் இதை அவராகவே கருணை கொண்டு செய்யவில்லை. விசா கட்டண உயர்வு அதிகப்படுத்தியத்திலிருந்து இந்நாள் வரை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான Google, Amazon, Microsoft, CTS, மற்றும் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ள வேறு பல அமெரிக்கா கம்பெனிகளும், , TCS, WIPRO மற்றும் INFOSYS போன்ற இந்திய நிறுவனங்களும், கொடுத்த அழுத்தத்தினால் தான் இது நடை பெற்றுள்ளது. டிரம்ப்பின் முந்தைய கட்டண உயர்வு அறிவிப்பால், அமெரிக்காவிலுள்ள, ஹ1பி விசா வைத்திருப்பவர்களின் எதிர்காலம் அங்கே கேள்விக்குறியானது. நமது இந்திய நாட்டிற்கு அவர்களை திரும்பி வருமாறு நமது மத்திய அரசின் முக்கியமான சில தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். நமது தமிழகத்து கதாநாயகன், Zoho நிறுவனத்தின் தலைவர் திரு வேம்பு அவர்களும் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பும் பட்சத்தில், அவர்ளுக்கு இங்கே நிச்சயமாக வேலை கிடைக்கும் என்று கூறினார். அமெரிக்காவிலுள்ள ஊழியர்களின் காலம் முடிந்ததும், அவரவர்கள் நாட்டிற்கு திரும்ப அவர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக இந்திய நாட்டைச் சேர்ந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா நிறுவனங்கள் அவர்களை இழந்து விட்டால், அவர்களது நிறுவனங்களை நடத்துவதற்கு புதிய H1B விசாவிற்கு 100000 டாலர் செலவழிக்க வேண்டிவரும். எனவே அந்த நிறுவங்களின் உரிமையாளர்கள் அமெரிக்க நாட்டின் செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூலம் டிரம்ப் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததால் திடீரென்று இந்த முடிவு. தற்போது உள்ள ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள, அந்த நிறுவனங்கள் இப்போதுள்ள H1B விசாதார்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து தக்க வைத்துக்கொள்வார்கள். எனவே இங்கு ஒரு சிலர் கருத்து தெரிவித்தபடி அவர்களது சம்பளம் குறைக்கப்படமாட்டாது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.


RAMESH KUMAR R V
அக் 21, 2025 21:06

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் விரைவில் தாயகம் நோக்கி வர விரும்புவார்கள் அந்த அளவுக்கு பாரததின் முன்னேற்றம் இருக்கும். வளர்க பாரதம்.


தாமரை மலர்கிறது
அக் 21, 2025 20:52

இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்நிய செலவாணி அமெரிக்காவிற்கு கிடைக்கும். அமெரிக்காவில் பல்கலை கழகங்கள் செழித்து பெருகும். அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடனை இந்தியா ரத்து செய்யவேண்டும். அங்கு ஏற்கனவே உள்ள இந்திய ஊழியர்கள் இனி கம்பெனியை விட்டு செல்லமுடியாது. அறுபத்தைந்தாயிலிருந்து வெறும் ஐந்தாயிரமாக h1 பி விசா சுருங்கும். ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்கள் இன்னும் மூன்றாண்டுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் சம்பளம் ஏறாது. அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவங்களுக்கு இதனால் சந்தோசம் தான். ஆனால் சின்ன நிறுவனகள் பாதிக்கப்படும்.


rama adhavan
அக் 21, 2025 22:49

செல்லலாம் எல் 1 விசாவில். உ. ம். சென்னையில் உள்ள இன்போசிஸ் அதன் அமெரிக்கா கிளைகளுக்கு, அதன் கிளியண்ட் கம்பெனிளுக்கு அங்கு வேலை செய்ய அனுப்பலாம். இலட்சம் டாலர் கட்ட வேண்டாம். அதேபோல் எச் 4 இ ஏ டி க்கும் கட்டணம் தேவை இல்லை.


வல்லவன்
அக் 21, 2025 19:41

செம டிவிஸ்ட்டு.... இனி h4 to h1, j1 to h1, L1L2 to h1, tcs, Wipro, hcl, cts எல்லாத்துக்கும் மொத்தமா ஒரு ஆப்பு. நல்ல வேளையாக F1 மாணவர்கள் தப்பித்தார்கள்.. இருந்தாலும் H1 கிடைக்கும்வரை அவர்களுக்கும் திரிசங்கு சொர்கம்தான். H1 லாட்டரி முறையையும் ஒழித்துக்கட்டினால் இன்னும் சிறப்பு... வாழ்க தாயுமானவர் டிரம்ப்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை