உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயார்

போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயார்

காசா : 'ஹமாஸ்' பயங்கரவாத அமைப்பு காசாவில் போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டாக போர் நடக்கிறது. இதில் இஸ்ரேலில், 1,500 பேரும், காசாவில், 43,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுஉள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பல நாடுகள் முயற்சித்தன; எதுவும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், கத்தாரின் தோஹாவில் செயல்படும் ஹமாஸ் அரசியல் குழுவின் உறுப்பினர் பாசிம் நாய்ம் கூறியதாவது: ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெறுவது, இடம்பெயர்ந்த மக்கள் திரும்புவதற்கு அனுமதிப்பது, மனிதாபிமான உதவிகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் எந்தவொரு முன்மொழிவுக்கும் நாங்கள் தயார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
நவ 17, 2024 09:55

தீவிரவாத ஹமாஸ் தான் முதனுதலில் இஸ்ரயேலின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி இசுரேலியர்களி கடத்தியது . ஒரே கேள்வி.. இஸ்ரயேல் பணயக்கைதிகள் நிலைமை என்ன இப்போது போர் நிருத்தம் பற்றி பேசும் ஹமாஸ் ஏன் முட்டாள்தனமான செயலை செய்த்தது .தமிழில் பழமொழி "உப்பை தின்றவன் தண்ணீர் குடி த்துதான் ஆகவேண்டும் "


சமீபத்திய செய்தி