உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் விக்ரகம் தயாரித்த கல்லில் அனுமன் சிலை செதுக்க திட்டம்

ராமர் விக்ரகம் தயாரித்த கல்லில் அனுமன் சிலை செதுக்க திட்டம்

கொப்பால்: அயோத்தியில் ராமர் சிலை தயாரிக்க பயன்படுத்திய அதே கல்லின் மீதமுள்ள பகுதிகளில் அனுமன் சிலை தயாரிக்க, கொப்பாலின் சிற்பி திட்டமிட்டுள்ளார்.கொப்பாலை சேர்ந்தவர் பிரகாஷ். சிற்பியான இவர், பல கடவுள் விக்ரகங்களை உருவாக்கியவர். இவர் விஜயதாசர் உருவச்சிலையை செதுக்க வேண்டி வந்தது. கல் வாங்குவதற்க்காக 2022ன் டிசம்பர் 6ல், மைசூரின் கல் வியாபாரி சீனிவாசை சந்தித்தார்.ஆனால் கல் சிறிதாக இருந்ததால், அதை வாங்காமல் திரும்பினார். அதன்பின் இதே கல்லில், அயோத்தி ராமர் சிலை விக்ரகம் தயாரிக்கப்பட்டது, சிற்பி பிரகாஷுக்கு தெரிந்தது. ராமர் சிலை அமைத்த கல்லின் மீதமுள்ள பகுதிகளில் அனுமன் சிலை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.கொப்பால் கங்காவதியில் உள்ள அஞ்சனாத்ரி, அனுமன் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. எனவே இந்த மாவட்டம் சிறப்பானதாக கருதப்படுகிறது. 2007ல் இருந்து சிற்பி பிரகாஷ், அனுமன் சிலை தயாரிக்கிறார். தற்போது அயோத்தி ராமர் சிலை தயாரித்தது போக, மீதமுள்ள கல்லின் பகுதிகளில் சிறிது, சிறிதாக அனுமன் விக்ரகம் உருவாக்க பிரகாஷ், ஆர்வம் காண்பிக்கிறார்.மைசூருக்கு சென்று கல் வியாபாரி சீனிவாசை சந்தித்து, கல்லின் மிச்சப்பகுதிகளை தரும்படி கோரியுள்ளார்.சிற்பி பிரகாஷ் கூறியதாவது:அயோத்தி ராமர் உருவச்சிலை தயாரிக்கப்பட்ட கல்லின் மீதிப்பகுதிகள், மைசூரில் உள்ளன. இவற்றை அனுமன் சிலை தயாரிக்க அளிக்கும்படி, சீனிவாசிடம் கேட்டுள்ளேன். விஜயதாசர் சிலை செதுக்க, நான் தேர்வு செய்த கல்லில் இருந்து, அயோத்தி ராமர் சிலை உருவாக்கப்பட்டது மகிழ்ச்சியான விஷயமாகும்.தற்போது என்னிடம் மூன்று கற்கள் உள்ளன. இவற்றில் ராமன், அனுமன் விக்ரகங்களை செதுக்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை