உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தலில் தோல்வி: காங்கிரசை விமர்சிக்கும் கூட்டணி கட்சி

ஹரியானா தேர்தலில் தோல்வி: காங்கிரசை விமர்சிக்கும் கூட்டணி கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' கூட்டணி கட்சிகள் இல்லாமல் வெற்றி பெறுவோம் என நினைத்ததால் தான் காங்கிரஸ் தோல்வி அடைந்தது, '' என மஹாராஷ்டிராவை சேர்ந்த கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸ் தோல்வியை சந்தித்து உள்ளது. இதனை அக்கட்சியால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை. ஓட்டு இயந்திரங்கள் மீது புகார் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தை சந்திக்க போவதாகவும் கூறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கூட்டணி கட்சிகள் தற்போது காங்கிரசை விமர்சிக்க துவங்கி உள்ளன.காங்கிரஸ் தலைமையிலான ' இண்டியா ' கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது: ஹரியானாவில் தனித்து வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நினைத்ததால் தான், அங்கு ' இண்டியா' கூட்டணி வெற்றி பெற முடியவில்லை. அக்கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதை விரும்பவில்லை. காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் பூபிந்தர் ஹூடா நினைத்தார். சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் சிறிய கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்கி இருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்து இருக்கும். தேர்தலை பா.ஜ., எதிர்கொண்ட விதம் சிறப்பானது. தோல்வியடைந்த களத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்த நிலையில் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. முறையான அமைப்பு, நிர்வாகம் இருப்பதால் பா.ஜ., வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhaskaran
அக் 10, 2024 05:13

முதலில் காங்கிரசின் பழம் பெருச்சாளிகளை ஒரம கட்டி நேர்மையான இளம் மாநில தலைவர்களைநியமித்தால்மட்டுமே காவியை வீழ்த்த முடியும் ஆனால் அது நடப்பதற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வாய்ப்பில்லை ராஜா


Duruvesan
அக் 09, 2024 20:44

காங்கிரஸ் இல்லைனா தூக்கிறே ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டாரு, இதில பீலா வேற


Bahurudeen Ali Ahamed
அக் 09, 2024 15:28

மிகச்சரியான கூற்று, எல்லோரையும் அரவணைத்து சென்றிருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம், தான் என்ற அகங்காரம் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழித்து விடும்


S.L.Narasimman
அக் 09, 2024 16:05

தமிழகத்திலும் இதே மமதையில் பிஜெபி தோற்றது. இல்லையென்றால் 15 முதல் 20 பாராளுமன்ற சீட்டுகளில் வென்றிருக்கலாம்


Nallavanaga Viruppam
அக் 09, 2024 16:38

admk மமதையில் தோற்றது என்று கூறவேண்டும், எடபடியார் எடுத்த தவறான முடிவு அது, அண்ணாமலை அவர்களை சாக்கு சொல்வது குழந்தை செயல்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 09, 2024 20:38

நரசிம்மன் தமிழகத்தில் தோற்றது admk மற்றும் தலைக்கனம் பிடித்த எடப்பாடி. BJP வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அகந்தையினால் எடப்பாடி திருட்டு DMK விற்கு வாய்ப்பு அள்ளி கொடுத்துவிட்டார்.


SUBBU,MADURAI
அக் 09, 2024 15:12

இப்போதாவது ஹரியானா தேர்தலில் பாஜக நேர்மையான முறையில் வெற்றி பெற்றது என்ற உண்மையை எதிர்க்கட்சிகள் ஒத்துக் கொண்டது பாஜகவிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.


vadivelu
அக் 09, 2024 16:07

எதிர் கட்சிகள் என்றாகி விட்டது, பின் எப்படி பா ஜா கா நேர்மையாக வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்வார்கள். எதிர் கட்சிகளும் சரி, அதன் ஆதரவாளர்களும் சரி , மக்கள் என்றால் வர்கள் மட்டும்தான் என்று நினைப்பவர்கள். அவர்கள் சிந்தனைதான் உலகின். சரியான சிந்தனை என்று எண்ணி , அது தவறாகும் போது புலம்பி தள்ளுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை