உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தல்: மிகவும் பணக்கார பா.ஜ. ,வேட்பாளர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஹரியானா தேர்தல்: மிகவும் பணக்கார பா.ஜ. ,வேட்பாளர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் மிகவும் பணக்கார வேட்பாளராக பா.ஜ.வை சேர்ந்த கேப்டன் அபிமன்யூ ரூ. 417 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக். 05-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ., காங்., ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இம்மாநில நாராணவுட் தொகுதி பா.ஜ,.,வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் கேப்டன் அபிமன்யூ என்பவர் போட்டியிடுகிறார்.அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வங்கியில் தனக்கு அசையும் சொத்தாக பல்வேறு முதலீடாக ரூ. 16 கோடியும் ,தன் மனைவிக்கு ரூ. 369 கோடியில் அசையா சொத்துக்களும், ரூ. 47.93 கோடி அசையும் சொத்துக்களும் என ரூ. 417 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இம்மாநிலத்தில் மிகவும் பணக்கார வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
செப் 14, 2024 00:24

தேசப்பற்றுள்ள பணக்காரர்கள் இந்தியாவை வல்லரசாக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் பிஜேபியில் இணைந்து போட்டியிடுகிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் இல் உள்ளவர்கள் கணக்கில் வராத கருப்பு பண பணக்காரர்கள்.


தத்வமசி
செப் 13, 2024 23:03

கணவருக்கு சொத்து இருந்தால் அது மனைவியைச் சேரும் என்று கூறலாம். மனைவியின் சொத்துக்கு கணவன் என்ன செய்வார் ? இவர் ஏன் கணக்கு காட்ட வேண்டும் ? எங்கள் பக்கம் வந்து பாருங்கள்.. கணக்கு காட்டும் விதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.


முக்கிய வீடியோ