உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'மனைவியாகவே இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் வார்தாவில் வசித்து வந்த சிறுமிக்கு, பக்கத்து வீட்டு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். கடந்த 2019ல் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சிறுமியை துன்புறுத்திய இளைஞர், கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை எனக் கூறி, கருவை கலைக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் நலக் குழுவில் புகாரளித்தார். இந்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:நம் நாட்டில் பெண்களுக்கான திருமண வயது 18. அதேசமயம் தாம்பத்திய உறவுக்கான ஒப்புதல் வயதும் 18 ஆகவே உள்ளது. எனவே, 18 வயதுக்கு உட்பட்ட பெண் மனைவி யாக இருந்தாலும் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகவே கருதப்படும். சட்டம் இவ்வாறு தெளிவாக இருக்கும் போது, 18 வயதுக்கு குறைவான மனைவியின் சம்மதத்துடனேயே உறவு கொண்டதாக இளைஞர் கூறுவதை ஏற்க முடியாது.அவர்களுக்கு இடையே நடந்தது திருமணம் என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் கூட, தன் சம்மதம் இல்லாமலேயே உறவு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்த வழக்கில், இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலில் குற்றம் நடந்த போது, அந்த பெண் சிறுமியாக இருந்துள்ளார் என்பது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ., சோதனையில், இளைஞர் தான் அதன் தந்தை என்பதும் உறுதியாகிஉள்ளது. ஆகையால், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு கால சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
நவ 16, 2024 09:17

அதாவது, மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே ...... இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா யுவர் ஆனர் ? அதாவது இது மதச்சார்பின்மை அடிப்படையிலான தீர்ப்பா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:42

பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. அது குற்றமாகாது ...... இப்படியும் புரட்சிகர தீர்ப்புக்கள் வருகின்றன ..... அதே சமயம் முக்கியத்துவம் உள்ள பொது நல வழக்கை யாராவது தொடர்ந்தால் அவற்றுக்கு உள்நோக்கம் கற்பித்து நீதிபதிகள் அபராதம் விதிக்கிறார்கள் .....


ஜெய்ஹிந்த்புரம்
நவ 16, 2024 06:22

அப்போ சிதம்பரம் தீட்சிதர்வாள்ஸ் எல்லாம் போஸ்கோ சட்டத்தில் கைதாவாங்களா மைலார்டு ?


அப்பாவி
நவ 16, 2024 06:21

மைனர் பெண்ணை ஏண்டா கலியாணம் கட்டிக் குடுத்தீங்கன்னு கேக்க துப்பில்லாத நீதிமன்றங்கள். அவிங்க என்ன செய்யலாம், செய்தக்கூடாதுன்னு சட்ட விளக்கம் அளிக்குதுங்க. சிரிப்பு மண்டபங்கள். இவிங்களுக்கு நம்ம கிராம நாட்டாமைகளே தேவலை.


அப்பாவி
நவ 16, 2024 04:53

பத்து வருஷத்துக்கு உள்ளே போட்டு கஞ்சி காச்சுங்கடா... கடவுளே... சுப்ரிம் கோர்ட் தலையிட்டு விடுதலை செய்யாம இருக்கணும்.


Smba
நவ 16, 2024 04:37

அப்ப பூஜை புணஸ்காரம் தானா


புதிய வீடியோ