உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரில் கடத்திய ரூ.1.31 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

காரில் கடத்திய ரூ.1.31 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுச்சேரி எஸ்.ஐ., நிஷாத் தலைமையிலான போலீசாரும், மாவட்ட போதை தடுப்பு பிரிவும் ஒருங்கிணைந்து, நேற்று காலை வேலந்தாவளம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, கோவையில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், எவ்வித ஆவணமும் இன்றி, 1 கோடியே, 31 லட்சத்து, 50,000 ரூபாய் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மண்ணா ராமபுரத்தை சேர்ந்த சபியான், 47, என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த பணத்துடன் அவரை தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி