போலீஸ் காவலில் இருந்தவர் மரணம்
உடுப்பி: லாக்கப்பில் கைதி மரணம் அடைந்தது குறித்து, சி.ஜ.டி., விசாரணை நடத்தப்படுகிறது.உடுப்பி, செர்க்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னையும் தனது குழந்தைகளையும் கூலித்தொழிலாளியான பிஜு மோகன், 45, என்பவர், வீட்டிற்குள் நுழைந்து துன்புறுத்துவதாக பிரம்மாவர் போலீஸ் நிலையத்தில், கடந்த 9ம் தேதி புகார் செய்திருந்தார்.இதன்படி, அவரை பிரம்மாவர் போலீசார் கைது செய்து, லாக்கப்பில் அடைத்தனர். நேற்று அதிகாலை பிஜு மோகன், லாக்கப்பில் உணர்வின்றி கிடந்துள்ளார். போலீசார், அவரை பிரம்மாவர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிஜு மோகன், கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர்.எஸ்.பி., அருண் குமார் கூறுகையில், ''இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கும். இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம், பிரேத பரிசோதனை நடத்தப்படும். வீடியோ பதிவு செய்யப்படும். லாக்கப்பில் நடந்த மரணம் என்பதால், மிகவும் கவனமாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.