உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவரு கணக்குல ரொம்ப வீக்; இது கணக்கில்லை, பொது அறிவு: காஷ்மீர் பிரசாரத்தில் காரசாரம்

அவரு கணக்குல ரொம்ப வீக்; இது கணக்கில்லை, பொது அறிவு: காஷ்மீர் பிரசாரத்தில் காரசாரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் 3வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நட்டா - ஓமர் அப்துல்லா இருவரும், ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சித்துள்ளனர்.ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடைசி மற்றும் 3வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் அக்.,1ம் தேதி நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் 60.21 சதவீதமும், 2வது கட்ட தேர்தலில் 56.79 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. இது ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலில் பதிவான அதிகபட்ச ஓட்டுப்பதிவு சதவீதமாகும். இதனிடையே, 3வது கட்ட தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்தால், அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு, எனக் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா, ' சிலர் பதிவாகியுள்ள ஓட்டு சதவீதத்தை பார்க்க வேண்டும். முன்பு 6 முதல் 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 58 முதல் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஓமர் அப்துல்லா கணக்கில் மோசம் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும்,' என கிண்டலாகக் கூறினார். அமைச்சர் ஜே.பி., நட்டாவின் இந்தப் பேச்சுக்கு ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கணக்கு பாடத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 2014ம் ஆண்டு முதல் பல இடங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. ஸ்ரீநகரின் பல இடங்களிலும் கூட, கடந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் கூட இந்த முறை விழவில்லை. இதற்கு, கணிதம் தேவையில்லை. பொது அறிவு இருந்தாலே போதும், எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ravi Kulasekaran
செப் 29, 2024 15:53

முடிவுகள் வரட்டும் பார்த்து விடலாம் உங்களை யார் ஏற்பது சிலவேளைகளில் பாஜக ஆட்சியில் வராமல் இருக்கலாம் ஆனால் நீங்களும் முத்திமெகபூபா முதல்வர் ஆக முடியாது ஜால்ரா போட மட்டும் முடியும் குடும்ப ஆட்சிக்கு படிப்படியாக சாவுமணி தெலுங்கானா ஆந்திரப் பிரதேசம் உதாரணம் அடுத்து கஷ்மீர் & தமிழ் நாடு


rasaa
செப் 29, 2024 14:13

340 சட்டத்தை வைத்துக்கொண்டு இவனும், இவன் அப்பனும் சுகபோக ராஜ வாழ்க்கை வாழந்துவந்தார்கள். யார் பணம்? நமது வரிப்பணம். அந்த வாழ்க்கை போய்விட்டதே என்ற வயிற்றெரிச்சலில் புலம்பிக்கொண்டுள்ளார்கள்.


பேசும் தமிழன்
செப் 28, 2024 09:44

ஓமர் அப்துல்லா... 8 பெருசா..... 58 பெருசா ??? பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


Kasimani Baskaran
செப் 28, 2024 07:24

என்னதான் ஆனாலும் இந்தியச்சட்டத்தை வைத்துக்கொண்டு முன்னர் கொள்ளை அடித்தது போல அடிக்க முடியாது. ஓவராக ஆடினால் டெல்லி முதல்வர் போலத்தான் ஆகவேண்டும்.


panneer selvam
செப் 27, 2024 22:51

Omar ji , If the vote percentage in Kashmir valley is less means , they do not trust you as well as Madame Mehbooba and of course they wont vote for BJP as per their religious code .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை