உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாரடைப்பு அச்சம்; இதய பரிசோதனைக்காக மைசூரு மருத்துவமனையில் குவிந்த மக்கள் கூட்டம்!

மாரடைப்பு அச்சம்; இதய பரிசோதனைக்காக மைசூரு மருத்துவமனையில் குவிந்த மக்கள் கூட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு: கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் இளைஞர்கள் உள்பட பலர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இதய பரிசோதனை செய்வதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேர் மைசூரு மருத்துவமனையில் குவிந்தனர்.ஹாசன் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக மாரடைப்புக்கு பலியாவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதுவரையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்று கூட ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாம்ராஜ்நகரில் அரசுப் பள்ளியில் பயின்று வந்த 4ம் வகுப்பு மாணவன் ஒருவன், மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்துள்ளான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rttts9jz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹாசன் மாவட்டத்தில் நிகழும் தொடரும் மாரடைப்பு மரணங்களால், கர்நாடகா மக்கள் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளனர். அந்த வகையில், மைசூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில், இதய பிரச்னைகள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்ய நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் குவிந்துள்ளனர். வரிசையில் காத்திருந்து, இதய பரிசோதனையை செய்து வருகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'வெளியாகும் செய்திகளை பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். எங்களின் மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வதால் இதய பிரச்னைகள் தீர்ந்துவிடாது. உடல் நலத்தை பராமரிக்க வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற கூட்டமாக பரிசோதனை செய்ய குவிவதால், ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியாமல் போய் விடும்,' எனக் கூறினார். மாரடைப்பு மரண பீதியால், மருத்துவமனையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:46

தரமற்ற எண்ணெய் crude vege oil என்று டேங்கரில் வரும் எண்ணெய் முதல் அடுத்தவன் தோட்டத்தில் செம்மறி ஆட்டினை விட்டு விளைச்சலை திருடி வளர்க்கும் மாமிசம் வரை என்னென்ன வேலையை காட்டும்


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 20:45

பயந்துபோய் ஒருமுறை மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வதால் இதய பிரச்னைகள் தீர்ந்துவிடாது. உடல் நலத்தை பராமரிக்க உணவு கட்டுப்பாடும் வயதிற்கேற்ற உடற்பயிற்சியும் தேவை.


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 19:03

மாமிசஉணவை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதால், அதிகளவு கொழுப்பு உருவாக்கி மாரடைப்பு வருகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி, மாமிச உணவுகளுக்கு நாற்பது சதவீத வரி போட்டால், மக்கள் அந்த உணவை தவிர்த்து, நலமுடன் நெடுங்காலம் வாழ்வார்கள்.


தமிழ்வேள்
ஜூலை 09, 2025 20:53

இருநூறு சதவீதம் வரி விதித்தால் கூட கறி தின்னாது இருக்க இயலாதவர்களாக கறி அடிமைகளாக மாறிவிட்டது இந்த சமூகம்...நடு இரவு பிரியாணி விடியல் காலை பிரியாணி சிக்கன் மட்டன் போர்க் என்று வெறிபிடித்து அலையும் கும்பலுக்கு எந்த அறிவுரையும் கட்டுப்பாடுகளும் ஒத்து வராது...


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 08:00

ஏற்கனவே அடுத்தவன் விளைச்சலை திருடும் மக்கள் பெருகி விட்டார்கள் இதில் இப்படி ஒரு ஐடியா வேற


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 18:36

மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப முதல்வரே கிளப்பி விட்ட புரளி இது. தாட்சண்யமில்லாமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என விஷயமறிந்த மக்கள் விரும்புகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை