உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!

கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!

புதுடில்லி: கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., எம்.பி.,க்களுக்கும் கடும் விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் பேசியது, வேதனை அளித்ததாக தி.மு.க., எம்.பி., கனிமொழி புகார் கூறினார். இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், ஜன., 31ல் துவங்கி, பிப்., 13ல் முடிந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று துவங்கி, ஏப்., 4 வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில், முக்கியத்துவம் வாய்ந்த வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=awp2rdir&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தவிர, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது, வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது மத்திய அரசின் முக்கிய அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இந்நிலையில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) துவங்கியது. லோக்சபா கூடியதும் புதிய கல்வி கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி தொடர்பாக தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது.தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் கூறியதாவது: தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. தமிழகத்தில் கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது ஏற்க முடியாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, என்றார்.

பதிலடி

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.

கல்வியில் அரசியல்

மாணவர்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, ஹிமாச்சல் ஆகிய மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்கின்றன. தவறான தகவல்களை தெரிவிப்பதோடு மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைக்கின்றது. மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது.

யூ-டர்ன்

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பது தொடர்பாக எம்.பி.,க்கள், தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் சந்தித்தனர். கடந்த மார்ச் 15ல் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்ட தமிழக அரசு தற்போது யூ-டர்ன் அடிக்கிறது. பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் சேர தமிழக முதல்வர் சம்மதித்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்; யார் அந்த சூப்பர் முதல்வர் என்று எம்.பி., கனிமொழி கூற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி பதில்

இதற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியதாவது: மும்மொழிக் கொள்கையை தமிழகம் நிச்சயம் ஏற்காது. தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என்ற தர்மேந்திர பிரதானின் பேச்சு வேதனை அளிக்கிறது. கல்வி நிதியை விடுக்க வலியுறுத்தி தான் மத்திய கல்வி துறை அமைச்சரை தமிழக எம்.பி.,க்கள் உடன் சந்தித்தேன். தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்னைகள் இருக்கிறது. முழுமையாக ஏற்க முடியாது என தெளிவாக கூறினோம். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், எனது வார்த்தைகள் தமிழக எம்.பி.,க்களை காயப்படுத்தி இருந்தால் அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பிரதான் பேட்டி

இது குறித்து பார்லிமென்ட் வளாகத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: மும்மொழிக்கொள்கை குறித்து தமிழக அரசுக்கு புரிதல் இல்லையே தவிர, மற்றபடி எந்த கொள்கையும் இல்லை எல்லாம் அரசியல் தான். வட மாநிலங்களில் பலர் மும்மொழியை தெரிந்து வைத்துள்ளனர்.

3வது மொழி

எனது மகள் கூட அவரது பள்ளியில் 3வது மொழியாக மராத்தி படித்து வருகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க மறுக்கிறோம் என எந்த காரணத்தையும் தமிழக அரசு கூறவில்லை. நாகரீகமற்றவர்கள் என கூறிய வார்த்தையை திரும்ப பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அமளி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, லோக்சபாவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

ராஜ்யசபா

அதேபோல், காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடந்தது. தொகுதி மறுசீரமைப்பு விவாகாரத்தில் விவாதம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறி தி.மு.க., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

vijai hindu
மார் 11, 2025 10:46

திகார் ஜெயில் இருந்ததைவிட இது கேவலமா இருக்கு


venugopal s
மார் 10, 2025 23:24

சங்கிகள் எல்லோரும் அட்டைக்கத்தி வீரர்கள், கோழைகள்.முதலில் துள்ளுவார்கள், அப்புறம் பம்முவார்கள்!


kumar
மார் 10, 2025 23:15

கனிமொழி


Ramesh Sargam
மார் 10, 2025 21:54

மத்திய அமைச்சர் நாகரீகம் தெரிந்தவர். ஆகையால் மன்னிப்பு கேட்டார். இதே போன்று ஒரு தவறை கனிமொழி செய்திருந்தால், அதற்கு எதிர்ப்பு இருந்தால், கனிமொழி மன்னிப்பு கேட்பாரா? மாட்டார். ஏன்? அவருக்கு நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாது.


venugopal s
மார் 11, 2025 09:18

சபை நாகரீகம் தெரிந்தவர்கள் முதலில் அந்த வார்த்தையை பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள்!


Kumar Kumzi
மார் 10, 2025 20:51

நாலு புறூஸ்மார் ஓனர் ப்ரூட் லாங்குவேஜிக்கு எதுக்கு மரியாதை


Barakat Ali
மார் 10, 2025 20:42

முதலில் ஒப்புக்கொண்ட சூப்பர் முதல்வர் யார் என்று உறுப்பினர் கனிமொழிதான் தெரிவிக்க வேண்டும் என்று பந்தை திமுக பக்கமே திரும்பிவிட்டார் .... நாகரிகமான வார்த்தைகளால் கழகத்தின் மானத்தை தண்டவாளம் ஏற்றிவிட்டார் என்று கழகத்தலைகளுக்கோ, அவர்களது அடிமைகளுக்கோ புரியவே புரியாது .....


Barakat Ali
மார் 10, 2025 20:39

அமைச்சர் பேசிய வீடியோ பார்த்தேன் ..... withdraw my words அதாவது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார் .... கழகக் கொத்தடிமைகள் அவர் மன்னிப்புக் கேட்டதாக நினைத்து சொறிந்து கொண்டு சுகம் காணலாம் .....


தத்வமசி
மார் 10, 2025 20:38

கனிமொழி அவர்களின் தந்தை பயன்படுத்தாத இழி சொற்களா ? உலகில் வேறு யாரும் தங்களின் அரசியல் வாழ்க்கையில் இப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டார்கள்.


தத்வமசி
மார் 10, 2025 20:28

ஒரு திட்டத்தை அங்கீகரித்து அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதற்காக ஒதுக்கப்படும் திட்டத்தொகை கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எப்படி அந்த தொகை கிடைக்கும் ? நவோதயா பள்ளிகளுக்கான திட்டத் தொகை தமிழகத்திற்கு கிடையாது. காரணம் தமிழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இல்லை. அது போலத் தான் இதுவும். ஏற்றுக் கொண்டால் திட்டத் தொகை கிடைக்கும், இல்லையென்றால் இல்லை.


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 19:18

கொடுத்த வாக்கை பின்பற்றாமல் மாநில அரசு பின்வாங்குவது, மத்திய அரசை ஏமாற்றுவது நாகரீகமற்ற செயல். மத்திய அமைச்சர் கூறியதில் எந்த தவறும் இல்லை. மிக சரியாக கூறியுள்ளார். வரவேற்கத்தக்கது. பாராட்டுதலுக்கு உரியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை