மேலும் செய்திகள்
மாட்டுபட்டி அணையில் அதிவேக படகு இயக்கவில்லை
08-Jul-2025
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால், சுற்றுலா படகுகள் இயக்கப்படவில்லை. அதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இம்மாவட்டத்தில் கன மழை முன்னெச்சரிக்கையின்போது பேரிடர் ஆணையம் விதிமுறைப்படி சுற்றுலா படகுகள் உட்பட நீர்நிலை சுற்றுலா, சாகச சுற்றுலா பாதுகாப்பு கருதி தவிர்க்கப்படும்.இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முதல் நாளை (ஜூலை 20) வரை கன மழைக்கான' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.அதனால் இச்சுற்றுலாக்கள் செயல்படவில்லை. குறிப்பாக மாவட்டத்தில் சுற்றுலா படகுகள் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் இரவிகுளம் தேசிய பூங்கா உட்பட பூங்காக்கள் திறக்கப்பட்டன.
08-Jul-2025