உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்டம்பர் மாதம் கொட்டப்போகுது கனமழை; வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும்; வானிலை மையம் கணிப்பு

செப்டம்பர் மாதம் கொட்டப்போகுது கனமழை; வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும்; வானிலை மையம் கணிப்பு

புதுடில்லி: 'செப்டம்பர் மாதம் இந்தியா மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்ளது. திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும்' என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சலப் பிரதேசம் உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக அதி கனமழை ஒரே நேரத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் அதிகமான உயிரிழப்புகளும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா மழைக்காலத்தை எதிர்கொள்ளும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 2025க்கான மாதாந்திர சராசரி மழைப்பொழிவு, கடந்த காலங்களை விட அதிகமாக இருக்கும். சராசரி மழைப்பொழிவான 167.9 மில்லி மீட்டரை விட 109 சதவீதம் அதிக கன மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இயல்பான மழைப்பொழிவை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இருப்பினும், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில், இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகன மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது: செப்டம்பர் மாதத்தில் உத்தராகண்டில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும். தெற்கு ஹரியானா, டில்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும்.பல ஆறுகள் உத்தரகண்டில் உற்பத்தியாகின்றன. எனவே, கனமழை பெய்தால் பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கும், மேலும் அது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சத்தீஸ்கரில் உள்ள மகாநதி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பெரிய ராசு
செப் 02, 2025 19:41

தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் கணக்கில்லாத குவாரி மேற்குத்தொடர்ச்சி மலையை தொடர்ந்து துயூலுரியும் திருட்டு திராவிடய விஷக்கிருமிகளால் மலையன்னை காணாமல் போயி விட்டாள். ஒரு நாளைக்கு தென்காசியில் மட்டும் சுமார் 500 முதல் 1000 லாரிகளில் கனிமவளங்கள் கொள்ளை போகின்றன. இனி இயற்கை அன்னை அவர்கள் தலையில் இடியை இறக்கவேண்டும் , அனைவரையும் கூண்டோடு கொண்டு செல்ல வேண்டும்.


Ananthakrishnan N
செப் 01, 2025 08:33

அதிபுத்திசாலி கொஞ்சம் இமாசல பிரதேசம் மற்றும் சம்மு காஷ்மீரில் யார் ஆட்சி பண்றாங்கனு சொல்லு பார்ப்போம். வந்துட்டான் கருத்து சொல்ல


பிரேம்ஜி
செப் 01, 2025 07:46

வானிலை அறிக்கையும் ஜோதிடர்கள் அறிக்கையும் தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்! சொல்லிய படி ஏதும் நடக்காது என்று உறுதியாக நம்பலாம்!


Venugopal S
ஆக 31, 2025 23:13

இது போன்ற இயற்கை சீற்றங்கள் பாஜகவின் அக்கிரம ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டுமே நிகழும்.நமது தமிழகத்துக்கு ஒன்றும் ஆகாது!


பெரிய ராசு
ஆக 31, 2025 20:45

தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் கணக்கில்லாத குவாரி மேற்குத்தொடர்ச்சி மலையை தொடர்ந்து துயூலுரியும் திருட்டு திராவிடய விஷக்கிருமிகளால் மலையன்னை காணாமல் போயி விட்டாள். ஒரு நாளைக்கு தென்காசியில் மட்டும் சுமார் 500 முதல் 1000 லாரிகளில் கனிமவளங்கள் கொள்ளை போகின்றன. இனி இயற்கை அன்னை அவர்கள் தலையில் இடியை இறக்கவேண்டும் , அனைவரையும் கூண்டோடு கொண்டு செல்ல வேண்டும்.


M Ramachandran
ஆக 31, 2025 20:10

உங்க சொல் பேச்சையெல்லாம் அது கேக்காது. அது பாட்டுக்கும் நீங்க சொல்லாத இடத்தில் டென்ட் அடிச்சி வேலையை காட்டும்.


Natchimuthu Chithiraisamy
ஆக 31, 2025 19:33

காங்கயம் படியூருக்கு பார்த்துச்சொல்லுங்கள். ஒரு துளி மழை பொழியவில்லை இதுவரை.


Nada raja
ஆக 31, 2025 18:30

மீண்டும் ஒரு பேரிடரா மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது


Nada raja
ஆக 31, 2025 18:30

ஏற்கனவே பல உயிர்கள் வர்ண பகவான் ஏற்படுத்திய இயற்கை பேரிடர்களால் இந்த ஆண்டு போய்விட்டது மீண்டும் ஒரு இயற்கை பேரிடரா? இறைவன் தான் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளித்து காப்பாற்ற வேண்டும்


Elango
ஆக 31, 2025 19:12

விதி வலியது!யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது நடப்பதை ஏற்கும் மனநிலை வேண்டும்.இயற்கையை கட்டுபடுத்த முடியாது...


முக்கிய வீடியோ