உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் கொட்டியது கனமழை; சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி; மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

டில்லியில் கொட்டியது கனமழை; சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி; மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.டில்லியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டில்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், லோதி சாலை, டில்லி-ஹரியானா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.கல்கஜி பகுதியில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் பலியானர். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். ஒரு கார் பலத்த சேதம் அடைந்தது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளின் நடுவில் பல வாகனங்கள் பழுதடைந்தன. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தென்மேற்கு டில்லியின் வசந்த் விஹாரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். டில்லியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 15, 2025 10:56

புது இந்தியாவை உருவாக்க அழைப்பு. போங்க..


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 15, 2025 00:14

சங் கீ பெர்சன்ஸ்களுக்கு திட்டுவதற்கு யாரும் இல்லாமல் திண்டாடுகிறார்கள். வாட்ஸ் அப்பு யூனிவர்சிட்டி விஞ்ஞானிகள் எதற்கும் நேருவை காரணம் சொல்லி விடுங்களேன். நம்புவதற்கு தான் ஒரு பெரும் கூட்டத்தை மூளையை கழுவி தயாராக்கி வைத்துள்ளீர்களே .


SANKAR
ஆக 14, 2025 22:43

Delhi theeyamooka aatchi responsible even one day rain kills.Stalin must resign


Nada raja
ஆக 14, 2025 22:31

ஓம்சாந்தி


Tamilan
ஆக 14, 2025 22:22

டிரில்லியன் டாலர் நாட்டின் தலைநகர் மழைகாலம் முழுவதும் நாறிப்போய் விடுகிறது , கோடை காலம் முழுவதும் மூச்சு விட முடியவில்லை . இப்படி ஒரு அலங்கோலம் உலகில் எங்கும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை